உயிரி பிளாஸ்டிக் இயக்கத்தில் இந்தியா முன்னணி.. கலக்கும் மோடி அரசு..

Update: 2024-10-15 09:04 GMT

பொருளாதாரத்தில் உலகத் தலைவராகவும், பசுமையான மற்றும் தூய்மையான பூமியை உறுதி செய்வதில் முன்னணி நாடாகவும் இந்தியாவை உருவாக்குவதில் மற்றொரு முயற்சியாக மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் புதுதில்லியிலிருந்து மெய்நிகர் முறையில் இன்று தொடங்கி வைத்தார். பார்வையாளர்களிடையே உரையாற்றிய டாக்டர் ஜிதேந்திர சிங், "பாலிலாக்டிக் அமிலம் பயோ பிளாஸ்டிக் உற்பத்திக்காக உள்நாட்டில் ஒருங்கிணைந்த தொழில்நுட்பத்தை உருவாக்குவதில் இந்த செயல்விளக்க வசதி' ஒரு முன்னோடி முயற்சியாகும். நிலையான தீர்வுகளுக்கான இந்தியாவின் உறுதிப்பாட்டிற்கு இது ஒரு முக்கிய வளர்ச்சியைக் குறிக்கிறது. உலகளாவிய பிளாஸ்டிக் மாசுபாடு நெருக்கடியை சரி செய்வதற்கு முக்கியமான சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுகளுக்கு மாறுவதற்கான இந்தியாவின் தீர்மானத்தை இது நிரூபிக்கிறது" என்கிறார்.


அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் இந்தியாவின் முன்னேற்றம் குறித்து பேசிய அவர், "2023 ஆம் ஆண்டில் நமது உயிரியல் பொருளாதாரம் 150 பில்லியன் டாலருக்கும் அதிகமாக வளர்ந்துள்ளது, மேலும் 2030 ஆம் ஆண்டில் 300 பில்லியன் டாலரை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது" என்றார். உயிரி தொழில்நுட்பத் துறையின் பயோஇ3 (பொருளாதாரம், சுற்றுச்சூழல் மற்றும் வேலைவாய்ப்புக்கான உயிரி தொழில்நுட்பம்) கொள்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது என்று அவர் கூறினார். பருவநிலை மாற்றம், புதுப்பிக்க முடியாத வளங்கள் மற்றும் நீடித்த கழிவு உருவாக்கம் ஆகியவற்றின் பின்னணியில் பயோஇ3 கொள்கை என்பது நிலையான வளர்ச்சியை நோக்கிய முக்கியமான முன்னெடுப்பாகும்.



 



டாக்டர் ஜிதேந்திர சிங் மேலும் கூறுகையில், "இந்தியா இப்போது பயோடெக் துறையில் உலகில் 12 வது இடத்திலும், ஆசிய-பசிஃபிக் பிராந்தியத்தில் 3 வது இடத்திலும் உள்ளது. நாம் மிகப்பெரிய தடுப்பூசி உற்பத்தியாளராகவும், 3வது பெரிய ஸ்டார்ட்அப் சூழல் அமைப்பாகவும் இருக்கிறோம்" என்றார். உயிரித் தொழில்நுட்ப ஸ்டார்ட் அப்களின் எழுச்சி நமது எதிர்காலப் பொருளாதாரத்திற்கு முக்கியமானது. இந்த முயற்சிகள் உலகளாவிய உயிரி பிளாஸ்டிக் இயக்கத்தில் இந்தியாவை முன்னணியில் வைக்கின்றன, தூய்மையான, நிலையான எதிர்காலத்திற்கு உயிரி தொழில்நுட்பம் எவ்வாறு பங்களிக்க முடியும் என்பதை உலகிற்கு காட்டுகிறது என்றும் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News