இல்லம் தேடி வெள்ளம்: திமுக ஆட்சியில் மழைநீர் வெள்ளத்தால் தவிக்கும் தலைநகர்!
இன்று (அக்டோபர் 15) மத்திய தெற்கு வங்க கடலில் நன்கு குறைக்கப்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்றுதால் சென்னையில் அதிகாலையில் இருந்தே மழை பொழிய தொடங்கியது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் போன்ற சென்னை சுற்றியுள்ள மாவட்டங்களும் பகுதிகளும் அதிகாலையில் இருந்தே கனமழையால் பாதிக்கப்பட்டது. ஈக்காட்டுத்தாங்கல், வீனஸ் காலனி மற்றும் அழகப்பா ரோடு உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளானார்கள்.
மேலும் நகரின் முக்கியமான சாலையான வடபழனி 100 அடி சாலையில் வெள்ளம் சூழ்ந்த பகுதியாக காட்சியளித்து வாகனங்கள் செல்ல முடியாமல் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வட தமிழகம், புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திராவை ஒட்டி உள்ள பகுதிகளில் அக்டோபர் 17ஆம் தேதிக்குள் தீவிர மலை பொழிய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
2023 ஏற்பட்ட மழை வெள்ளப்பெருக்கை இயற்கை தான் காரணம் என்று கூறி இந்த ஆண்டிற்கான திமுக அரசு மழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செய்தது. முன்னதாக கடந்த வருடம் நினைத்ததற்கு மேலாக மழை பொழிந்தால் அதை நம்மால் எப்படி கணிக்க முடியும் என்ற ஒரு பேச்சை முன்வைத்து திமுகவின் முக்கிய அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் மக்களின் கேள்விகளை சமாளித்து வந்தனர். இதனை அடுத்து இதே நிலை அடுத்த வருடமும் ஏற்படும் என்று எதிர்க்கட்சிகள் தரப்பில் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் 2023 ஏற்பட்டதைப் போன்றே தற்பொழுதும் ஒரு நாள் மழைக்கு சென்னை நகரின் பெரும்பாலான பகுதிகளில் மழை நீர் தேங்கி இருக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அவற்றில் சில வெள்ளப் பெருக்கு புகைப்படங்களை இங்கே காணலாம்.