டிஜிட்டல் பயன்பாட்டில் இந்தியாவை முன்னோக்கி கொண்டு சென்ற மோடி அரசு!
டிஜிட்டல் தொழில்நுட்ப பயன்பாட்டுக்கு சர்வதேச அளவிலான விதிகள் வகுக்கப்பட வேண்டும் என்று பிரதமர் மோடி கூறினார்.
டெல்லியில் சர்வதேச தொலைதொடர்பு சங்க மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்திய மொபைல் மாநாட்டையும் அவர் தொடங்கி வைத்தார். அவர் பேசியதாவது :-
டிஜிட்டல் சாதனங்களும் செயலிகளும் எல்லைக்கு அப்பாற்பட்டவை.எந்த நாடும் தனியாக தனது குடிமக்களை இணைய அச்சுறுத்தலில் இருந்து பாதுகாத்திட முடியாது. எனவே டிஜிட்டல் தொழில்நுட்ப பயன்பாட்டுக்கு என சர்வதேச அளவிலான வழிகாட்டு விதிமுறைகள் வகுக்கப்பட வேண்டும். அத்தகைய விதிமுறைகளை சர்வதேச நிறுவனங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது. குடிமக்களை பாதுகாக்க என்ன செய்யக்கூடாது என்பது அந்த விதிமுறைகளில் இருக்க வேண்டும். இதற்காக நாம் ஒன்றாக பாடுபட வேண்டும்.இணைய அச்சுறுத்தலை ஒடுக்குவதில் சர்வதேச அளவில் ஒத்துழைப்பு நிலவ வேண்டும்.
விமான போக்குவரத்து துறைக்கு எப்படி சர்வதேச அளவில் விதிமுறைகள் இருக்கிறதோ அது போன்று டிஜிட்டல் தொழில்நுட்பத்துக்கும் இருக்க வேண்டும். உலகத்தை மோதலில் இருந்து விடுவித்து ஒன்றுபடுவது தான் இந்தியாவின் வேலை. அன்றைய பட்டுப்பாதையாக இருந்தாலும் சரி இன்றைய தொழில்நுட்ப பாதையாக இருந்தாலும் சரி உலகத்தை ஒன்று படுத்தி முன்னேற்றத்திற்கான புதிய கதவுகளை திறப்பது தான் எங்கள் நோக்கம். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்துவதற்கான விதிமுறைகள் வகுக்கப்பட வேண்டும்.எந்த எதிர்கால சவாலையும் சந்திக்கும் அளவுக்கு பாதுகாப்பான விதிமுறைகளை உலக அமைப்புடன் வகுக்க வேண்டும் .
இந்தியாவில் 120 கோடி பேர் செல்போன் பயன்படுத்துகிறார்கள். 95 பேர் இணையதளம் பயன்படுத்துகிறார்கள். உலக அளவில் டிஜிட்டல் பண பரிமாற்றத்தில் 40 சதவீதம் இந்தியாவில் நடக்கிறது .இந்தியாவில் 5ஜி தொலைதொடர்பு சேவை பல பகுதிகளில் கிடைக்கிறது.6 ஜிக்கான சேவை பணி ஏற்கனவே தொடங்கிவிட்டது. செல்போன்களை இறக்குமதி செய்யும் நாடு என்பதிலிருந்து ஏற்றுமதி செய்யும் நாடாக இந்தியா உயர்ந்துவிட்டது. சந்திரனுக்கும் இடையிலான தூரத்தை போல் எட்டு மடங்கு தூரத்துக்கு கண்ணாடி இடம் கேபிள்கள் பதிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் பேசினார்.