செறிவூட்டப்பட்ட அரிசி.. நுண்ணூட்டச்சத்து குறைபாடுகளை எதிர்கொள்வதற்கான மத்திய அரசின் லட்சிய முயற்சி..

Update: 2024-10-18 08:48 GMT

பிரதமரின் ஏழைகள் நல இலவச உணவுத் திட்டம் மற்றும் பிற நலத்திட்டங்கள் உட்பட அரசின் அனைத்து திட்டங்களின் கீழ் செறிவூட்டப்பட்ட அரிசியை வழங்கும் திட்டத்தை 2024 ஜூலை முதல் 2028 டிசம்பர் வரை தொடர்வதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதால், நாட்டில் நுண்ணூட்டச்சத்து குறைபாடுகளை எதிர்த்துப் போராடுவதற்கான மத்திய அரசின் முன் முயற்சி தொடர்கிறது. தலசீமியா மற்றும் அரிவாள் செல் இரத்த சோகை போன்ற ஹீமோகுளோபினோபதிகளால் பாதிக்கப்பட்ட நபர்கள் உட்பட அனைவருக்கும் செறிவூட்டப்பட்ட அரிசி நுகர்வு பாதுகாப்பானது என்பதை அறிவியல் சான்றுகள் ஆதரிக்கின்றன என்பதை குறிப்பிடவேண்டியதில்லை.


இந்தியாவில் செறிவூட்டப்பட்ட அரிசி தொடக்கத்தில் தலசீமியா மற்றும் அரிவாள் செல் ரத்த சோகை உள்ளவர்களுக்கு உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் (உணவுகளின் செறிவூட்டல்) விதிமுறைகள், 2018-ன் படி, சுகாதார ஆலோசனையாக வழங்கப்பட்டது. இந்த ஆலோசனை ஒரு விஞ்ஞானக் குழுவால் கேள்விக்குள்ளாக்கப்பட்டது. வேறு எந்த நாடும் இதுபோன்ற ஆலோசனையை அளிக்கவில்லை என்று குறிப்பிட்டது. இதற்கு பதிலளிக்கும் விதமாக, இந்திய அரசின் உணவு மற்றும் பொது விநியோகத் துறை, இந்த ஹீமோகுளோபினோபதி உள்ளவர்களுக்கு இரும்புச்சத்து செறிவூட்டப்பட்ட அரிசியின் பாதுகாப்பை மதிப்பிடுவதற்காக 2023-ல் ஒரு பணிக்குழுவை அமைத்தது.


அத்தகைய நபர்களுக்கான எந்தவொரு பாதுகாப்பு எதிர்வினைகளையும் தற்போதைய சான்றுகள் ஆதரிக்கவில்லை என்று பணிக்குழுவின் அறிக்கை முடிவு செய்தது. தலசீமியா நோயாளிகளுக்கு ரத்தமாற்றத்தின் போது உறிஞ்சப்படும் இரும்புச்சத்துடன் ஒப்பிடும்போது செறிவூட்டப்பட்ட அரிசியிலிருந்து இரும்பு உட்கொள்ளல் மிகக் குறைவாகும். இந்த மதிப்பீட்டைத் தொடர்ந்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி குழுமத்தின் தலைமை இயக்குநர் தலைமையிலான குழு விரிவான மதிப்பாய்வை நடத்தியது. இந்த உலகளாவிய விஞ்ஞான மதிப்பாய்வின் அடிப்படையில், இரும்புச்சத்து செறிவூட்டப்பட்ட அரிசி இந்த ஹீமோகுளோபினோபதி உள்ளவர்களுக்கு சுகாதார ஆபத்தை ஏற்படுத்துகிறது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

Input & Image courtesy: News

Tags:    

Similar News