சுப்ரீம் கோர்ட்டில் திறந்து வைக்கப்பட்ட புதிய சிலை!

நீதி தேவதை சிலையில் கண்கள் கட்டப்பட்ட கருப்பு துணி கையில் இருந்த வாள் நீக்கப்பட்டு கிரீடம் மற்றும் அரசியல் சாசன புத்தகத்துடன் புதிதாக வடிவமைக்கப்பட்ட நீதி தேவதை சிலை சுப்ரீம் கோர்ட்டில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

Update: 2024-10-18 14:21 GMT

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தின் போது சுப்ரீம் கோர்ட்டில் நீதி தேவதை சிலை நிறுவப்பட்டது. அந்த நீதி தேவதை சிலையின் கண்கள் கருப்பு துணியால் கட்டப்படும், இடது கையில் தராசும் வலது கையில் வாளும் இருக்கும்படி அமைக்கப்பட்டு இருந்தது.பாகுபாடு பார்த்து நீதி வழங்காமல் இருக்கவும், சரிசமமாக எடை போட்டு சரியான தீர்ப்பை வழங்க வேண்டும் என்பதையும் அநீதியை வீழ்த்த வாள் இடம்பெற வேண்டும் என்பதை குறிக்கும் வகையில் இந்த நீதி தேவதையின் சிலை வடிவமைக்கப்பட்டது.

இந்நிலையில் நீதி தேவதையின் சிலையில் சில மாற்றம் செய்து சுப்ரீம் கோர்ட்டில் உள்ள நூலகத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. அதாவது நீதி தேவதையின் புதிய சிலையில் கண்களில் கருப்பு துணி இல்லை.அதே போல் வலது கையில் வைக்கப்பட்டிருந்த வாளுக்கு பதிலாக அரசியல் சாசன புத்தகமும் இடம் பெற்றுள்ளது.மேலும் இந்த புதிய சிலையானது தலையில் கிரீடம், நெற்றி திலகத்துடன் இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய நீதி தேவதை சிலை சுப்ரீம் கோர்ட்டில் உள்ள நூலகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதனை சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சந்திர சூட் திறந்து வைத்தார்.

இந்த புதிய சிலை சொல்லும் செய்தி குறித்து வெளியான தகவலில் சட்டம் ஒருபோதும் குருடாகாது. அது அனைவரையும் சமமாக பார்க்கிறது. என்பதை வலியுறுத்தி நீதி தேவதையின் கண்கள் திறக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவின் சட்டங்களின்படி நீதி வழங்கப்படுகிறது என்பதை வலியுறுத்தும் வகையில் நீதி தேவதையின் வலது கையில் இடம் பெற்று இருந்த வாளுக்கு பதிலாக அரசியலமைப்பு புத்தகம் இடம் பெற்றுள்ளது எனக் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News