அரசு நிலம் ஆக்கிரமித்த வழக்கு - முன்னாள் ஒய்.எஸ். ஆர்.காங்கிரஸ் எம்.பி வீட்டில் அமலாக்கத்துறை அதிரடி

அரசு நிலம் ஆக்கிரமித்த வழக்கில் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் முன்னாள் எம்பி உள்ளிட்டோர் வீடுகளில் இருந்து 300-க்கும் மேற்பட்ட விற்பனை பத்திரங்களை கைப்பற்றியதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

Update: 2024-10-22 16:28 GMT

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த எந்தனா கிராமத்தில் முதியவர்கள் மற்றும் ஆதரவற்றோருக்கு வீடு கட்டுவதற்காக தனியார் நிறுவனம் ஒன்றுக்கு மாநில அரசு 12 புள்ளிகள் நிலத்தை கடந்த 2008 ஆம் ஆண்டு வழங்கியது. ரூபாய் 200 கோடிக்கு மேல் மதிப்பு கொண்ட இந்த நிலத்தை மேற்படி நிறுவனத்திற்கு கடந்த 2010 ஆம் ஆண்டு அரசு பதிவு செய்தது. ஆனால் இந்த நிலத்தை ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் எம்.பி யான சத்யநாராயணா உள்ளிட்டோர் ஆக்கிரமித்ததாக புகார் எழுந்தது .இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர் .

இந்த வழக்கின் அடிப்படையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர் .இதன் அடிப்படையில் கடந்த 19ஆம் தேதி அதிரடி சோதனையும் நடைபெற்றது. அதன்படி முன்னாள் எம்.பி சத்யநாராயணா ஆடிட்டர் கண்ணமனேனி வெங்கடேஸ்வரராவ் உட்பட 3 பேருக்கு சொந்தமான வீடுகள் உள்ளிட்ட ஐந்து இடங்களில் இந்த சோதனை நடந்தது .மாநிலத்தில் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சோதனையில் பல்வேறு ஆவணங்கள் சிக்கி இருப்பதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். சொத்து விற்பனை பத்திரங்கள் ,பினாமி, சொத்துக்கள் கைப்பற்றப்பட்டதாக அவர்கள் சொத்து ஆவணம்.

முதியவர்கள் மற்றும் ஆதரவற்றோருக்கு வீடுகள் கட்டுவதற்காக அரசு வழங்கிய இந்த நிலத்தை குற்றம் சாட்டப்பட்ட இந்த நபர்கள் மோசடியாக தங்கள் பெயருக்கு மாற்றப்பட்டுள்ளனர். அதை சிறிய மனைகளாகப் பிரித்து 2021 முதல் பல்வேறு நபர்களுக்கு விற்பனை செய்யப்பட்டது .அதன் மூலம் ஆம் ஆண்டு 150 கோடி ரூபாய்க்கு மேல் சம்பாதித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர் இந்த விவகாரம் ஆந்திர அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News