உலக நாடுகளுக்கு நம்பிக்கை நட்சத்திரமாக திகழும் இந்தியா: மோடி அரசின் சாதனை
புதுதில்லியில் என்டிடிவி உலக உச்சிமாநாடு 2024-ல் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மாநாட்டில் பங்கேற்ற அனைத்துப் பிரமுகர்களையும் வரவேற்றதுடன் உலகளாவிய பல்வேறு பிரச்சனைகள் குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார். பல்வேறு நாடுகளிலிருந்து வந்துள்ள பல்வேறு துறை சார்ந்த முன்னோடிகள் தத்தமது கருத்துக்களை எடுத்துரைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
கடந்த 5 ஆண்டுகளில் எதிர்காலத்தைப் பற்றிய பிரச்சனைகள் பொதுவான கருத்தாக விவாதிக்கப்பட்டதை சுட்டிக்காட்டினார். சமீபத்திய சவால்களான கொவிட் பெருந்தொற்று, கொவிட் பாதிப்புக்கு பிந்தைய பொருளாதார நெருக்கடி பணவீக்கம் வேலைவாய்ப்பின்மை பருவநிலை மாற்றம் நீடித்து வரும் போர்கள் விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள பாதிப்பு அப்பாவி மக்கள் உயிரிழப்பு புவி அரசியல் சார்ந்த பதற்றங்கள் மற்றும் மோதல்கள் அனைத்து உலகளாவிய உச்சிமாநாடுகளிலும் விவாதப் பொருளாக மாறியுள்ளன. இந்தியாவில் நடைபெற்று வரும் விவாதங்களுக்கு இணையாக, இந்தியா தனக்கான நூற்றாண்டு என்பதை வெளிப்படுத்தி வருவதையும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.
உலக நாடுகள் நெருக்கடியில் சிக்கியுள்ள இந்த யுகத்தில் இந்தியா நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்துள்ளது. உலகம் கவலையில் ஆழ்ந்திருந்த போது இந்தியா நம்பிக்கையைப் பரப்பியது என பிரதமர் குறிப்பிட்டார். உலகளாவிய சூழல் மற்றும் எதிர்நோக்கியுள்ள சவால்கள் காரணமாக இந்தியா பாதிக்கப்பட்டாலும், நேர்மறை உணர்வுடன் பணியாற்றுவதை காணமுடிகிறது என்றும் அவர் கூறினார்.
Input & Image courtesy: News