வெறும் நூறு நாட்களில் எண்ணற்ற திட்டங்கள்: மோடி அரசினால் சாத்தியமானது

Update: 2024-10-24 17:50 GMT

மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு வரலாற்றுச் சிறப்புமிக்க வகையில் 3வது முறை ஆட்சிக்கு வந்தவுடன், நாட்டின் தொழில்துறை வளர்ச்சிக்கு ரூ15 லட்சம் கோடி ஒதுக்கியுள்ளது என தெரிவித்தார். இத்துடன் எளிதாக தொழில்புரிய தடையாக இருந்த சுமார் 1500 பழைய சட்டங்களை நீக்கியுள்ளது எனவும் தொழில் வளர்ச்சிக்கு ஏற்ற புதிய கொள்கைகளையும் சட்டங்களையும் வகுத்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். நாட்டில் உள்கட்டமைப்பு வளர்ச்சிக்காக 3 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டு உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

நாட்டில் உள்ள அனைத்து தரப்பு மக்களையும் முன்னேற்றும் வகையில் அனைத்து துறைகளுக்கான வளர்ச்சியையும் முன்னெடுத்துச் செல்ல கடந்த 100 நாட்களில் மட்டும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு எண்ணற்ற திட்டங்களை அறிவித்துள்ளது என்று அமைச்சர் தெரிவித்தார். இவை யாவும் 2047ல் இந்தியா ஒரு வளர்ச்சியடைந்த நாடாக மாற அடித்தளம் அமைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். புதிதாக தனியார் பண்பலை அலைவரிசை தொடங்குவதற்கான அனுமதியின் மூலம் நாட்டில் மொத்தம் 234 தனியார் பண்பலை வானொலி அலைவரிசைகளுக்கான ஏலம் அக்டோபர் 14-ம் தேதி தொடங்கியுள்ளதாக அவர் தெரிவித்தார். இதில் தமிழ்நாட்டில் 11 நகரங்களில், தலா 3 அலைவரிசைகளுக்கான ஏலமும் தொடங்கியுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.


குறிப்பாக பாரம்பரிய ஊடகங்களாக வானொலியும், தொலைக்காட்சியும் இன்றும் சிறப்பாக உள்ளன என்று கூறிய அவர் டிஜிட்டல் யுகத்தில் வானொலியை மீண்டும் பிரபலமாக்கியது நமது பிரதமர் நரேந்திர மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சியே என்றும் தெரிவித்தார்.

நாட்டின் பொருளாதாரத்தில் ஊடகம் மற்றும் பொழுதுபோக்குத் துறை முக்கிய பங்காற்றுவதாக அமைச்சர் கூறினார். திரைப்படத் துறையை பாதுகாக்கும் வண்ணம் அண்மையில் ஒளிப்பதிவு சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டதை அவர் சுட்டிக்காட்டினார். இதன் மூலம் திரைப்பட திருட்டு நடைபெறாமல் தடுக்க முடியும் என்றும் அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News