கோவில் பகுதியில் நடந்த சட்டவிரோத மதமாற்றம்: தடுத்து நிறுத்திய இந்து முன்னணியினர்!
தமிழகத்தில் மதமாற்றம் எனும் செயல் சர்வசாதாரணமாக அரங்கேறி வருகிறது. குறிப்பாக கிராமப்புறங்களில் மதமாற்றம் பெரும்பாலும் நடைபெற்று வருகிறது. ஏழை எளிய கிராம மக்களை குறிவைத்து நடைபெறும் இந்த சட்ட விரோத மதமாற்றத்திற்கு எதிராக இந்து முன்னணியினர் தொடர்ச்சியான வண்ணம் குரல் கொடுத்து வருகிறார்கள். அந்த வகையில் தற்பொழுது கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள புதுப்பேட்டை பகுதியில் மதமாற்றம் ஆனது நடைபெற்று கொண்டு இருந்தது அதை இந்து முன்னணியினர் தடுத்து நிறுத்தி இருக்கிறார்கள்.
கடலூர் மாவட்டம், பரங்கிப்பேட்டை, 15-வது வார்டு, அகரம், புதுப்பேட்டை, காமாட்சி அம்மன் கோவில் பகுதியில், சமூக விரோதிகள் சிலர் பணத்திற்காக கிறிஸ்துவ மதமாற்றத்தில் ஈடுபடுவது தெரிய வந்த நிலையில், கிராம நிர்வாகம் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் இந்துமுன்னணி பொறுப்பாளர்களுக்கு தகவல் தெரிவித்ததன் பேரில், கோவில் நிர்வாகத்தினர் மற்றும் கிராம மக்களுடன் நேரில் சென்று பார்த்தபோது கணேசன். த/பெ. ஜெயபால் என்பவர் அனுமதி இல்லாமல் காமாட்சி அம்மன் கோவில் அருகிலேயே கான்கிரீட் பில்டிங் அமைத்து ஜெபக்கூடம் கட்டுவது தெரியவந்தது.
கட்டுமானப் பணியை தடுத்து நிறுத்தி, கட்டாய மதமாற்றத்தில் ஈடுபட்டவர்களையும் இந்து முன்னணி பொறுப்பாளர்கள் தடுத்து நிறுத்தி உள்ளனர்.
Input & Image courtesy:News