முத்ரா திட்டத்தின் கடன் வரம்பை அறிவித்தபடியே உயர்த்தி அசத்திய மத்திய அரசு!

பிரதமரின் முத்ரா திட்டத்தின் கீழ் கடன் வரம்பு 10 லட்சத்திலிருந்து 20 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

Update: 2024-10-28 13:51 GMT

பிரதமரின் முத்ரா திட்டத்தின் கீழ் கடன் வரம்பு 10 லட்சத்திலிருந்து 20 லட்சமாக உயர்த்தப்படும் என்று கடந்த ஜூலை 23 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட 2024-25 ஆம் ஆண்டு மத்திய அரசின் மத்திய பட்ஜெட்டில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார். அந்த அறிவிப்புக்கு இணங்க இந்த கடன் வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது .

இது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ள மத்திய நிதி அமைச்சகம் "பிரதமரின் முத்ரா திட்டத்தின் கீழ் கடன் வரம்பு ரூபாய் பத்து லட்சத்திலிருந்து 20 இலட்சமாக உயர்த்தப்படுகிறது. நிதி பெறாதவர்களுக்கு நிதி உதவி அளிக்கும் முத்ரா திட்டத்தின் ஒட்டுமொத்த நோக்கத்தை இது மேலும் வலுப்படுத்தும் .இந்த அதிகரிப்பு தொழில் முனைவோருக்கு அவர்களின் வளர்ச்சிக்கும் விரிவாக்கத்திற்கும் உதவும் . புதிய வகை தருண் பிளஸ் திட்டத்தின் கீழ் ரூபாய் 10 லட்சம் முதல் 20 லட்சம் வரை கடன் பெற முடியும். ஏற்கனவே தருண் வகையின் கீழ் கடன் பெற்று வெற்றிகரமாக செலுத்திய தொழில் முனைவோருக்கு ரூபாய் 20 லட்சம் வரை கடன் கிடைக்கும்.

பிரதமரின் முத்ரா திட்டத்தின் கடன்களுக்கான உத்தரவாத காப்பீடு நுண்அலகுகளுக்கான கடன் உத்திரவாதத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. முத்ரா திட்டம் ரூபாய் 50,000 வரை கடன் வழங்கும் ஷிஷூ , ரூபாய் ஐம்பதாயிரம் முதல் ஐந்து லட்சம் வரை கடன் வழங்கும் கிஷோர் , ரூபாய் 5 லட்சத்திற்கு மேல் 10 லட்சம் வரை கடன் வழங்கும் தருண் ஆகிய வகைகளைக் கொண்டது. இதில் தற்போது தருண் பிளஸ் என்ற புதிய வகை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Tags:    

Similar News