பிரதமர் மோடியால் ரஷ்யா உக்ரைன் போரை நிறுத்த உதவ முடியும் - ஜெலன்ஸ்கி நம்பிக்கை

பிரதமர் மோடியால் ரஷ்ய போரை நிறுத்த உதவ முடியும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Update: 2024-11-01 05:22 GMT

உக்ரைன் நேட்டோ கூட்டமைப்பில் சேர்வதற்கு எதிர்ப்பு தெரிவித்த ரஷ்யா, கடந்த 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அந்த நாடு மீது போர் தொடுத்தது. இரண்டு ஆண்டுகளைக் கடந்துவிட்ட நிலையில் தற்போது இரு நாடுகளுக்கு இடையேயான போர் முடிவுக்கு வந்த பாடு இல்லை. ரஷ்யா-உக்ரைன் போரை நிறுத்த வேண்டும் என்று பல்வேறு நாடுகளும் வலியுறுத்தி வருகின்றன. இந்த யுகம் போருக்கானது இல்லை எனவும் எந்த ஒரு பிரச்சனைக்கும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முடியும் எனவும் இந்திய பிரதமர் மோடி கூறி வருகிறார். இந்த நிலையில் பிரதமர் மோடியால் ரஷ்ய போரை நிறுத்த உதவ முடியும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்ன்க்கி நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஜெலன்ஸ்கி கூறியது:-

உலகின் மிகப்பெரிய நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். அதிக மக்கள் தொகை கொண்ட நாடு ஐந்தாவது மிகப்பெரிய பொருளாதார நாடு என பல்வேறு சிறப்புகளை இந்தியா பெற்றுள்ளது . சர்வதேச அரசியலில் அந்த நாடு ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்திய பிரதமர் நரேந்திர மோடி உலகின் செல்வாக்கு மிக்க தலைவராக விளங்குகிறார். உக்ரைன் போரை நிறுத்த அவரால் உதவ முடியும் .இது தொடர்பாக இந்தியாவில் அமைதி பேச்சு வார்த்தைக்கு வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News