டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையில் புதிய உச்சம்: டாப் இடத்தில் இருக்கும் இந்தியா!

Update: 2024-11-02 16:59 GMT

கடந்த அக்டோபரில் இதுவரை இல்லாத அளவிற்கு UPI மூலம் சுமார் ரூ.23.5 லட்சம் கோடி மதிப்புள்ள பணப் பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் தற்போது அனைத்து விதமான பணப்பரிவர்த்தனைகளும் டிஜிட்டல் முறையில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நாம் இதை நாளுக்கு நாள் இதில் பல்வேறு விதமான நடவடிக்கைகளில் ஈடுபடுத்துகிறோம். இந்தியர்களின் அன்றாட வாழ்க்கையில் தினமும் ஆன்லைன் பரிவர்த்தனைகள் முக்கிய பங்காக மாறிவிட்டது. டீக்கடை முதல் ஷாப்பிங் மால் வரை டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவதில் மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.


தற்போது ஒரு பரிவர்த்தனைக்கான உச்சவரம்பு 5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. RBI கூறிய அறிவுரையின்படி மருத்துவமனைகள் மற்றும் கல்வி நிறுவனங்கள், நேரடி சிலரை விற்பனை போன்று விட்டு இருக்கு ஒரு லட்சம் முதல் ஐந்து லட்சம் வரை பரிவர்த்தனை செய்யலாம் என்று கூறப்பட்டது. இந்நிலையில் UPI மூலம் கடந்த அக்டோபரில், இதுவரை இல்லாத அளவிற்கு ரூ.23.5 லட்சம் கோடி பணப் பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது என தேசிய பணப்பரிவர்த்தனை ஆணையம் அறிவித்துள்ளது.

அதன்படி, 1,658 கோடி, பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன. பரிவர்த்தனைகள் எண்ணிக்கையின் அடிப்படையில், கடந்த செப்டம்பர் மாதத்தை விட இது 10 சதவீதம் அதிகம். பரிவர்த்தனைகள் மதிப்பின் அடிப்படையில் 14 சதவீதம் அதிகம் என தேசிய பணப் பரிவர்த்தனை ஆணையம் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

Input & Image courtesy: News

Tags:    

Similar News