இளைஞர்களுக்கான தரமான உயர் கல்விக்கான ஒரே நாடு ஒரே சந்தா திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல்

Update: 2024-11-26 07:48 GMT

கடந்த திங்கட்கிழமை பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது குறித்தும் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்தும் மத்திய செய்தி ஒலிபரப்புத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார் 

அதாவது கடந்த 10 ஆண்டுகளில் கல்வி துறையில் செய்யப்பட்ட பல்வேறு முன்னெடுப்புகளின் நோக்கங்களை மேலும் விரிவு படுத்தி அதனை மக்களிடையே கொண்டு சேர்க்க ஒரே நாடு ஒரே சந்தா என்ற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகவும் அதன் மூலம் இளைஞர்களுக்கு தரமான உயர் கல்வி வழங்க உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்

மேலும் வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற இலக்கை ஏற்றுவதற்கு புதிய கல்விக் கொள்கையின் பரிந்துரையின் படி பல்கலைக்கழகங்கள் கல்லூரிகள் மற்றும் ஆய்வகங்கள் உள்ளிட்டவற்றில் ஆய்வுகளை மேற்கொள்ள தொடங்கப்பட்ட அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி நிறுவனத்தின் முன்னெடுப்புகளுக்கு உறுதுணையாகவும் ஒரே நாடு ஒரே சந்தா திட்டம் தொடங்கப்பட்டுள்ளது என்றும் இந்த திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் ஒரே மாதிரியான சந்தா முறையை பின்பற்றுவதற்கு 6000 கோடி நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் 2025 2026 2027 ஆகிய மூன்று ஆண்டுகளுக்கு இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாகவும் கூறியுள்ளார் 

அதுமட்டுமின்றி இந்த திட்டத்தின் மூலம் 6300 கல்வி நிறுவனங்களில் உள்ள 1.8 கோடி மாணவர்கள் ஆசிரியர்கள் மற்றும் ஆய்வாளர்கள் பயனடையுள்ளனர் அதோடு இந்த திட்டத்தின் கீழ் மத்திய உயர்கல்வித்துரையால் தொடங்கப்பட்டுள்ள ஒரே நாடு ஒரே சந்தா வலைதளத்தின் மூலம் சமர்ப்பிக்கப்படுகின்ற ஆய்வு கட்டுரைகள் மற்றும் இதழ்களை உயர்கல்வி நிறுவனங்கள் காணலாம் என்பதையும் தெரிவித்துள்ளார். 

இந்த திட்டத்தை தவிர ஒரு கோடி விவசாயிகள் பயன்பெறும் வகையில் இயற்கை வேளாண் இயக்கம் அருணாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் இரு நீர்மின் நிலையங்கள் இந்தியாவில் மேற்கொள்ளப்படுகின்ற புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில் முனைவு சூழலை வலுப்படுத்துவதற்கு அடல் புதுமை இயக்கம் 2.0 மூன்று ரயில் திட்டங்கள் போன்றவற்றிற்கு மத்திய அமைச்சரவையில் ஒப்புதல் வழங்கப்பட்டிருக்கிறது 

Tags:    

Similar News