வங்கதேசத்தில் மத ரீதியிலான ஒடுக்குமுறை-ஜனநாயக நாடுகளின் வழி அல்ல!இஸ்கான் துறவியின் கைதுக்கு சத்குரு கடும் எதிர்ப்பு!
வங்கதேசத்தில் இந்து சமூகத்தினர் எதிர்கொள்ளும் கொடுமைகளுக்கு எதிராக அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சின்மோய் கிருஷ்ண பிரபு என்ற இஸ்கான் அமைப்பின் தலைமை துறவி கைது செய்யப்பட்டதற்கு சத்குரு கடுமையான எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளார் இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர் மதம் அல்லது மக்கள் தொகை பலவீனத்தின் அடிப்படையில் நடக்கும் ஒடுக்குமுறை ஜனநாயக நாடுகளின் வழி அல்ல எனக் குறிப்பிட்டுள்ளார்
சத்குருவின் எக்ஸ் பதிவில் ஒரு ஜனநாயக நாடு எவ்வாறு சிதைந்து மதவாத சர்வாதிகார நாடாக மாறுகிறது என்பதை காண்பது வெட்கக்கேடானது நாம் கொண்டிருக்கும் சுதந்திர ஜனநாயகத்தின் மதிப்புகளை புரிந்து கொள்வது ஒவ்வொரு குடிமகனின் பொறுப்பு மதம் அல்லது மக்கள் தொகை பலவீனத்தின் அடிப்படையில் நடக்கும் ஒடுக்குமுறை எந்தவிதத்திலும் ஜனநாயக நாடுகளின் வழி அல்ல துரதிருஷ்டவசமாக நமது அண்டை நாடு ஜனநாயக கொள்கைகளில் இருந்து விலகி விட்டது. அனைத்து குடிமக்களுக்கும் தேவையான உரிமைகள் மற்றும் அவரவர் தேவை மற்றும் நம்பிக்கைகளுக்கு ஏற்றவாறு வாழ்க்கையை அமைத்துக் கொள்ளும் வாய்ப்புடன் இருக்கும் ஒரு ஜனநாயக நாட்டினை கட்டமைப்பது ஒவ்வொரு வங்கதேச குடிமகனின் பொறுப்பாகும் எனக் கூறியுள்ளார்
https://x.com/SadhguruJV/status/1861233728074457496
வங்கதேசத்தில் மத சிறுபான்மையினராக இருந்து வரும் இந்து மக்களுக்கு எதிராக நடைபெற்று வரும் வன்முறை மற்றும் ஒடுக்குமுறை சம்பவங்களை எதிர்த்தும் அனைவரும் சமய உரிமையோடு வாழ தேவையான நடவடிக்கைகள் எடுக்கவும் சத்குரு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்
அந்த வகையில் இது குறித்து முன்னதாக எக்ஸ் தளத்தில் பதிவிட்ட சத்குரு இந்துக்களுக்கு எதிராக இழைக்கப்படும் கொடுமைகள் வங்கதேசத்தின் வெறும் உள்நாட்டுப் பிரச்சனை அல்ல நம் அண்டை நாட்டிலுள்ள சிறுபான்மையினருக்காக நாம் உறுதியாக நின்று விரைந்து செயல்படாவிட்டால் பாரதம் மஹா-பாரதமாக இருக்க முடியாது இந்த நாட்டின் அங்கமாக இருந்தது, துரதிர்ஷ்டவசமாக அண்டை நாடாகிவிட்டது ஆனால் நிஜத்தில் இந்த நாகரிகத்தைச் சேர்ந்த இம்மக்களை இத்தகைய அதிர்ச்சியான கொடுமைகளிலிருந்து பாதுகாப்பது நம் பொறுப்பு எனக் கூறி இருந்தார்