சமூக ஊடகங்களின் அத்துமீறல் மற்றும் ஆபாச உள்ளடக்கங்களை கட்டுப்படுத்த மக்களவையில் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அதிரடி பேச்சு!
மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இன்று நவம்பர் 27 சமூக ஊடக தளங்களில் பரவும் மோசமான உள்ளடக்கத்தின் சிக்கலைச் சமாளிக்க தற்போதுள்ள சட்டங்களை கடுமையாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்
மக்களவையில் உரையாற்றிய மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் இந்த விவகாரத்தில் நாடாளுமன்ற நிலைக்குழு விவாதிக்க வேண்டும் என்றும் இது தொடர்பாக மேலும் கடுமையான சட்டங்களை உருவாக்க ஒருமித்த கருத்துக்கு அழைப்பு விடுத்தார்
கேள்வி நேரத்தின் போது கடந்த காலங்களில் தலையங்க சரிபார்ப்புகள் உள்ளடக்கத்தின் சரியான தன்மையை தீர்மானித்ததாக வைஷ்ணவ் குறிப்பிட்டார் இருப்பினும் அந்த கட்டுப்பாடுகள் இனி நடைமுறையில் இல்லாத நிலையில் சமூக ஊடகங்கள் பத்திரிகை சுதந்திரத்திற்கான ஊடகமாக இருந்தாலும் கட்டுப்பாடற்றதாகவும் மோசமான உள்ளடக்கம் நிறைந்ததாகவும் உள்ளது
சமூக ஊடக தளங்களில் ஆபாசமான உள்ளடக்கத்தை கட்டுப்படுத்த தற்போதுள்ள சட்டங்களை இன்னும் கடுமையாக்க வேண்டிய அவசியம் உள்ளது என்று அஸ்வினி வைஷ்ணவ் சபையில் எடுத்துரைத்தார்
மேலும் சமூக ஊடக தளங்கள் மூலம் சட்டவிரோதமான மற்றும் பாலியல் தொடர்பான உள்ளடக்கங்களை ஒளிபரப்புவதை கட்டுப்படுத்துவதற்கான தற்போதைய வழிமுறைகள் மற்றும் தற்போதைய சட்டங்களை இன்னும் கடுமையாக்க அரசாங்கம் முன்மொழிகிறதா என்ற பாஜக எம்பி அருண் கோவிலின் கேள்விகளுக்கு வைஷ்ணவ் பதிலளித்துள்ளார் இந்த தளங்களை தவறாக பயன்படுத்துவதை தடுக்க சட்டங்கள் மிகவும் பயனுள்ளதாக இல்லை என்று கூறினார்