மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மீன்வளம் கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங் என்கிற லாலன் சிங் மாநில வாரியாக கால்நடை பராமரிப்பு மற்றும் மீன்வளத்துறைக்காக செயல்படும் கால்நடை பராமரிப்பு மையங்களின் எண்ணிக்கை மற்றும் 30.09.2024 அன்றைய நிலவரப்படி நிலுவையில் உள்ள தொகை விவரத்தை தெரிவித்தார்
மேலும் கிசான் கடன் அட்டை என்பது சேமிப்பு மற்றும் கடன் திட்டமாகும் 2019-ம் ஆண்டில் கே.சி.சி திட்டம் கால்நடை வளர்ப்பு பால் மற்றும் மீன்வளத்தின் செயல்பாட்டு மூலதன தேவையை உள்ளடக்கும் வகையில் நீட்டிக்கப்பட்டது வங்கிகள் ரூ.1.60 லட்சம் வரை பிணையமில்லா கடன் வழங்கலாம் மத்திய அரசின் வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறையின் மாற்றியமைக்கப்பட்ட வட்டி மானியத் திட்டத்தின் கீழ் விவசாய பராமரிப்பு பால்வளம் மற்றும் மீன்வள நடவடிக்கைகளுக்கான நடைமுறை மூலதனத் தேவையின் அடிப்படையில் வங்கிகளுக்கு 1.5% வட்டி மானியமும் விவசாயிகளுக்கு 3% உடனடியாக திருப்பிச் செலுத்தும் ஊக்கத்தொகையும் ரூ.2 லட்சம் வரை வழங்கப்படுகின்றன கடன்கள் ஒரு வருட காலத்திற்கு வழங்கப்படுகின்றன என்பதை தெரிவித்தார்
அதோடு கிசான் கடன் அட்டைகளைப் பெறுவதன் மூலம் விவசாயிகள் மானிய வட்டி விகிதங்களில் நடப்பு மூலதனக் கடன்களை பெற முடிகிறது இது கால்நடை வளர்ப்பு கோழி வளர்ப்பு மற்றும் மீன்வளம் போன்ற நடவடிக்கைகளுக்கான குறுகிய கால நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவுகிறது கால்நடை காப்பீடு தனிநபர் காப்பீடு சொத்து காப்பீடு மற்றும் சுகாதார காப்பீடு ஆகியவற்றை விவசாயிகள் பெறலாம் இந்த கடனானது சுழல் ரொக்கக் கடன் வடிவத்தில் உள்ளது இதன் மூலம் விவசாயிகள் தங்கள் பணப்புழக்கம் மற்றும் வருவாய் உருவாக்கும் முறைகளின் அடிப்படையில் தேவைக்கேற்ப பணத்தை திரும்பப் பெறவும் திருப்பிச் செலுத்தவும் முடிகிறது நிறுவன கடன் ஆதாரங்கள் மூலம் இந்த நிதி நன்மைகளை உறுதி செய்வதன் மூலம் கே.சி.சி.திட்டம் விவசாயிகளுக்கு சிறந்த வளங்களில் முதலீடு செய்யவும் உற்பத்தித்திறனை மேம்படுத்தவும் இறுதியில் அவர்களின் வருமானத்தை அதிகரிக்கவும் உதவுகிறது என்று கூறினார்
அதுமட்டுமின்றி தமிழ்நாட்டில் இத்திட்டத்தின் கீழ் கால்நடை வளர்ப்போருக்கு 7,13,732 கிசான் கடன் அட்டைகளும் மீன் விவசாயிகளுக்கு 39,714 கிசான் கடன் அட்டைகளும் வழங்கப்பட்டுள்ளது கே.சி.சி திட்டத்திற்கு சமமான அணுகலை உறுதி செய்வதற்காக இந்தத் துறை நிதி சேவைகள் துறை மற்றும் மாநில கால்நடை பராமரிப்பு மற்றும் மீன்வளத் துறையுடன் இணைந்து 2020 முதல் நாடு தழுவிய ஏ.எச்.டி.எஃப் கே.சி.சி இயக்கத்தை நடத்தி வருகிறது
திறம்பட செயல்படுத்த அனைத்து பங்குதாரர்களின் பங்களிப்பை வரையறுத்து பிரச்சாரத்திற்கான விரிவான வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டன இது தவிர வீட்டுக்கு வீடு கிசான் கடன் அட்டை கிசான் பாகிதாரி பிரத்மிக்தா ஹமாரி, பி.எம் ஜென்மன் பிரதமரின் பயிர் காப்பீட்டுத்திட்டம் போன்ற பல்வேறு இயக்கங்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன பல்வேறு நிகழ்வுகளில் காட்சிப்படுத்துவதற்காக ஏழு பிராந்திய மொழிகளில் கே.சி.சி குறித்த ஒரு படத்தை நபார்டு வெளியிட்டுள்ளதுடன் டிஜிட்டல் தளம் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக யூடியூப்பிலும் பதிவேற்றியுள்ளது என்று கூறினார்