மாணவர்களிடையே அதிகமாகும் வன்முறை:நடுரோட்டில் ரத்தம் சொட்ட சொட்ட நடந்த அடிதடி!

Update: 2024-12-04 16:34 GMT

மதுரை தெப்பக்குளம் பேருந்து நிலையத்தில் பள்ளி மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட வன்முறை மோதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது அரசு உதவி பெறும் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் பேருந்துக்காகக் காத்திருக்கும் பொழுது இரண்டு மாணவர்கள் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்ட வீடியோ வைரலாகி வருகிறது 

அதாவது அந்த வீடியோவில் ஐந்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒரு நபரை கும்பலாக சேர்ந்தது ஒரே நேரத்தில் குறிவைத்து தாக்குதல் நடத்துவது பதிவாகி உள்ளது அந்த தாக்குதலில் ஒரு மாணவருக்கு ரத்தம் கொட்டிய போதும் அவர்கள் சண்டையை கைவிடவில்லை ஒரு கட்டத்தில் சாலையில் கற்கள் வீசப்படுவதால் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகளுக்கு ஆபத்தான சூழ்நிலையை உருவாக்குகின்றனர்

குறிப்பாக 24 மணி நேரமும் போலீஸ் கண்காணிப்பில் இருந்த பகுதியில் இந்த சம்பவம் நடந்திருப்பது பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது மேலும் சமூக ஆர்வலர்கள் மற்றும் அக்கறையுள்ள பெற்றோர்கள் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர் அதோடு மாணவர்களின் இத்தகைய வன்முறை நடத்தைக்காக பலர் விமர்சித்துள்ளனர்

இந்த மோதல் பொது இடங்களில் பாதுகாப்பு மற்றும் பள்ளி சூழலுக்கு வெளியே மாணவர்களின் நடத்தை குறித்து கடுமையான கவலைகளை எழுப்பியுள்ளது

Tags:    

Similar News