பிரிவினைவாதத்தின் வேர்களை அறுக்கும் மத்திய அரசு: குடியரசு துணைத்தலைவர் பெருமிதம்!

Update: 2025-02-08 07:25 GMT

நமது நாட்டில் தேசிய வாதத்திற்கு எதிராகப் பிராந்திய வாதம் பற்றி எவ்வாறு விவாதம் நடைபெற முடியும் என்று குடியரசு துணைத்தலைவர் கேள்வி எழுப்பியுள்ளார். கர்நாடகாவின் ரானேபென்னூரில் நடைபெற்ற கலை இலக்கிய விழாவில் தொடக்கவுரை ஆற்றிய அவர், பிரிவினைவாதத்தின் வேர்களைப் பார்க்கும் போது இதில் தேசவிரோதச் சக்திகளின் கைகள் இருப்பதை நீங்கள் காணமுடியும் என்றார். பருவநிலை மாற்றத்தை விடவும் மோசமான சவால்களை நாம் இதனால் எதிர்கொண்டிருக்கிறோம் என்று குறிப்பிட எனக்குத் தயக்கமில்லை என்று கூறிய அவர், சாதி, பிராந்தியவாதம் உட்பட பல பிரிவினைவாதங்கள் உள்ளன என்றார். இத்தகைய பிரிவினைவாத சக்திகளுக்கு எதிராக அவர் எச்சரிக்கை விடுத்தார்.

சமீப ஆண்டுகளில் தேசவிரோத உணர்வுகளை அதிகப்படுத்த பணம் பயன்படுத்தப்படுகிறது. மற்ற நாடுகளில் நிகழாதவகையில் நீதித்துறை ஒரு கருவியாக பயன்படுத்தப்படுகிறது. நாட்டுக்கு சவால் விடுக்கும் தேசவிரோத சக்திகள் தேசிய வாதத்திற்கும், பிராந்தியவாதத்திற்கும் இடையே மோதலை உருவாக்க முயற்சி செய்கின்றன. இதற்கு அவை தக்கபதிலடியை பெற வேண்டும் என்று குடியரசு துணைத்தலைவர் தெரிவித்தார்.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி பற்றி குறிப்பிட்ட அவர், உலகில் எங்கே முதலீடு செய்ய முடியும், எங்கே வாய்ப்புகள் கிடைக்கின்றன, எங்கே திறமைகளை வெளிப்படுத்த முடியும் என்ற வினாக்களுக்கு விடையாக உலகின் முன்னணி நிறுவனங்களான ஐஎம்எஃப், உலக வங்கி போன்றவை இந்தியாவை எடுத்துக்காட்டுகின்றன என்றார்.

Input & Image Courtesy: News

Tags:    

Similar News