மக்களின் மருத்துவ வசதியிலும் சுகாதார நலனிலும் அக்கறை செலுத்தும் மத்திய அரசு !
நாடு முழுவதும் 14 கோடிக்கு அதிகமான பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் மற்றும் ஒன்பது கோடிக்கு மேற்பட்டவர்களுக்கு கருப்பை வாய் புற்றுநோய் பரிசோதனை செய்யப்பட்டதாக மத்திய அரசு கூறியுள்ளது.
நாடாளுமன்ற மக்களவையில் சுகாதாரத்துறை உறுப்பினர்களின் பல்வேறு கேள்விகளுக்கு சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா பதிலளித்தார் கூறினார்:-
நாடு முழுவதும் 14.6 கோடி பெண்களுக்கு மார்பக புற்று நோய்க்கான பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது .இதில் 57,184 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர். மேலும் 50,612 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதே போல 9 கோடிக்கு அதிகமானோர் கருப்பை வாய் புற்றுநோய்க்கான பரிசோதனை பரிசோதனை. இதில் 96,437 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளது. 86,196 பேர் சிகிச்சையில் உள்ளனர். தேசிய காசநோய் ஒழிப்பு தொடர்பாக 100 நாட்களுக்கு நடத்தப்பட்ட பிரச்சாரத்தின் கீழ் 5.63 கோடி பேரிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில் 1.59 லட்சம் புதியதாக நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர். ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் கடந்த ஜனவரி 1ஆம் தேதி வரை ரூபாய் 1.19 லட்சம் கோடி மதிப்பிலான சிகிச்சை இலவசமாக அளிக்கப்பட்டு இருக்கிறது . இத்திட்டத்தில் பல்வேறு வகையான மோசடிகளுக்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இந்த மோசடியில் ஈடுபட்ட 1,114 ஆஸ்பத்திரிகள் திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டு, ரூபாய் 122 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது இவ்வாறு ஜே.பி.நட்டா கூறினார். 23 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் யாசகம் கேட்பதற்கு எதிரான சட்டங்கள் இருப்பதாக பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை மந்திரி அன்னபூர்ணா தேவி மக்களவையில் தெரிவித்தார். மேலும் 15 மாநிலங்கள் இதற்கு எதிராக நிர்வாகத் திட்டங்களை அமல்படுத்துவதாகவும் கூறினார். நாடு முழுவதும் 20450 குழந்தைகள் பராமரிப்பு மையங்கள் இருப்பதாகவும் இதில் 999 மையங்கள் சிறப்பு குழந்தைகளுக்கானது என்றும் இந்த துறைக்கான இணை மந்திரி சாவித்திரி தாகூர் தெரிவித்தார் 2023 24ம் தேதி ஆண்டில் வழக்கு செலவுகளுக்காக மத்திய அரசு ரூபாய் 66 கோடியை செலவிட்டதாக மக்களவையில் சட்டமன்ற அர்ஜுன் ராம்குமார் தெரிவித்தார் இது முந்தைய ஆண்டை விட ஒன்பது கோடி அதிகம் என்றும் அவர் கூறினார்.