அரசு கலைக்கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை: தமிழகத்தில் அதிகரிக்கும் குற்றச்சாட்டு!
திண்டிவனம் அரசு கலைக் கல்லூரியில் 17 வயது மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுப்பதாக உதவி பேராசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அரசு கலைக் கல்லூரியில் குமார் என்பவர் பொருளாதாரத்துறை உதவி பேராசிரியராக பணியாற்றி வருகிறார். கடந்த செப்டம்பர் மாதம் முதல் அதே கல்லூரியில் படிக்கும் 17 வயது மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. கடந்த ஐந்தாம் தேதி முதல் மொபைல் போன் மற்றும் வீடியோ கால் மூலம் மீண்டும் பாலியல் தொந்தரவு அளித்த ஆடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனது.
இதனால் ஆத்திரமடைந்த அந்த இளம் பெண்ணின் பெற்றோர் திண்டிவனம் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர் இதன் அடிப்படையில் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து குமாரை சிறையில் அடைத்தனர். இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில் கோவிந்தசாமி அரசினர் கலைக் கல்லூரியில் முதலாம் ஆண்டு பயின்று வரும் மாணவிக்கு அதே கல்லூரியில் பொருளியல் பேராசிரியர் குமார் என்பவர் தொலைபேசி மூலம் பாலியல் தொல்லை கொடுப்பதுடன் தனது விருப்பத்திற்கு இணங்கும் படி மிரட்டல் விடுத்ததாக தகவல் வெளியாகி அதிர்ச்சி அளிக்கிறது. மாணவர்களுக்கு கல்வியையும், நல்லொழுக்கத்தையும் கற்றுத்தரும் ஆசிரியரே தேர்வு செயலில் ஈடுபட்டிருப்பது கண்டிக்கத்தக்கது.மாணவி அளித்த புகாரின் பெயரில் சம்பந்தப்பட்ட பேராசிரியரை கைது செய்து மாணவியருக்கு நீதி பெற்று தர வேண்டும் என்று மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
அண்மை காலமாகவே பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் மாணவிகளுக்கு பாதுகாப்பு பெற்ற நிலை நிலவுகிறது இதற்கு திமுக அரசு தான் பொறுபேற்க்க வேண்டும்.பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனை வழங்கவும். தொல்லை கொடுத்த பிறகு கல்வி சான்றிதழை ரத்து செய்வதில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ராமதாஸ் கூறினார்.