பெற்றோராக மாறி பள்ளி மாணவர்களுக்கு அறிவுரை கூறிய பிரதமர் மோடி!.

Update: 2025-02-11 16:58 GMT

தேர்வு குறித்த ஆலோசனை நிகழ்ச்சியின் 8-வது பதிப்பில், பிரதமர் நரேந்திர மோடி நேற்று புதுதில்லியில் உள்ள சுந்தர் நர்சரி பள்ளியில் மாணவர்களுடன் கலந்துரையாடினார். நாடு முழுவதும் உள்ள மாணவர்களுடன் கலந்துரையாடிய பிரதமர், பல்வேறு தலைப்புகளில் அவர்களுடன் விவாதித்தார். குளிர்காலத்தில் உடலை சூடாகப் பராமரிக்க உதவிடும் வகையில் பாரம்பரிய உணவுகள் (எள்) உட்கொள்ள வேண்டும் என்று பிரதமர் அறிவுறுத்தினார். ஊட்டச்சத்து என்ற தலைப்பைச் சுட்டிக் காட்டி பேசியபோது பிரதமர் ஐ.நா. சபை 2023- ஆண்டை 'சர்வதேச சிறுதானிய ஆண்டாக' அறிவித்தது. இந்தியா மேற்கொண்ட முயற்சியின் காரணமாக உலகம் முழுவதும் சிறுதானியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதாக மோடி குறிப்பிட்டார்.


ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் பலவகையான நோய்களிலிருந்து காத்துக்கொள்ள உதவுகிறது என்பதால் அது குறித்து விழிப்புணர்வு இருக்க வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தி வருவதை அவர் சுட்டிக்காட்டினார். சிறுதானியமான கம்பு நாட்டின் மிகச் சிறந்த உணவாக கருதப்படுகிறது என்று பிரதமர் எடுத்துரைத்தார். இந்தியாவில், பயிர் மற்றும் பழவகைகள் போன்ற உணவுப் பொருட்கள் நமது பாரம்பரியத்துடன் இணைக்கப் பட்டுள்ளன என்றும், ஒவ்வொரு புதிய பயிர் அல்லது பழவகைகள் கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்டு, இந்தியா முழுவதும் பெரும்பாலான பகுதிகளில் பண்டிகைகளாகக் கொண்டாடப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். மேலும், கடவுளுக்கு அளிக்கப்படும் காணிக்கை பிரசாதமாக விநியோகிக்கப்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

பருவகாலங்களுக்கு ஏற்ற பழவகைகளை உண்ண வேண்டும் என்று குழந்தைகளை மோடி வலியுறுத்தினார். நொறுக்குத் தீனிகள், எண்ணெய் உணவுகள், மைதாவில் செய்யப்பட்ட உணவுப் பொருட்களைத் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். சரியான உணவை எடுத்துக் கொள்ள வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்த பிரதமர், அவற்றை நன்கு மென்று சாப்பிட வேண்டும் என்று கூறினார். குழந்தைகள் குடிநீர் அருந்தும் போது, சிறு அளவில் நன்கு சுவைத்து குடிக்க வேண்டும் என்ற குறிப்புகளையும் அவர் பகிர்ந்து கொண்டார்.

Input & Image Courtesy: News

Tags:    

Similar News