இந்திய எரிசக்தி துறையில் கொட்டிக்கிடக்கும் வாய்ப்புகள்: சர்வதேச முதலீட்டாளர்களுக்கு மோடி அழைப்பு!
இந்திய எரிசக்தி துறையில் முதலீடு செய்யுமாறு சர்வதேச முதலீட்டாளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
'இந்திய எரிசத்தி வாரம் 2025' நிகழ்ச்சி டெல்லியில் நடந்து வருகிறது. சர்வதேச முதலீட்டாளர்கள் எரிசக்தி நிறுவன பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி நேற்று காணொளி மூலம் பங்கேற்று உரை நிகழ்த்தினார். அப்போது அவர் இந்திய எரிசக்தி துறையில் முதலீடு செய்து பயன்பெறுமாறு சர்வதேச முதலீட்டாளர்களை அழைத்தார் .இது தொடர்பாக அவர் கூறினார் :-
21ஆம் நூற்றாண்டு இந்தியாவுக்கானது என அனைத்து நிபுணர்களும் கூறி வருகின்றனர். பாரதம் தனது சொந்த வளர்ச்சியை மட்டும் இன்றி உலக மேம்பாட்டையும் முன்னெடுத்துச் செல்கிறது. எங்களிடம் வளங்கள் உள்ளன. அவற்றை நாங்கள் பயன்படுத்தி வருகிறோம் .எங்கள் புத்திசாலித்தனமான மனதை புதுமைப்படுத்த ஊக்குவிக்கிறோம். எங்களிடம் பொருளாதார வலிமையும் அரசியல் நிலைத் தன்மையும் உள்ளது. இந்தியா எரிசக்தி வர்த்தகத்தை எளிதாக்குவதுடன் கவர்ச்சிகரமானதாகவும் மாற்றுகிறது. மேலும் உலகளாவிய நிலைத் தன்மைக்கு இந்தியா உறுதி கொண்டுள்ளது.
இது நாட்டின் எரிசக்தி துறையில் புதிய சாத்தியக் கூறுகளுக்கு உதவுகிறது. இதன் மூலம் ஏராளமான புதிய முதலீடுகளுக்கான வாய்ப்புகள் உள்ளன. அந்த வகையில் இந்திய எரிசக்தி துறையில் ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. இந்த சாத்தியக் கூறுகளை நீங்கள் பயன்படுத்தி இருப்பீர்கள். இந்திய எரிசக்தி வாரத்தின் ஒரு பகுதியாக மட்டும் இந்தியாவில் சக்தி லட்சியங்களின் முக்கிய பகுதியாக நீங்கள் இருக்கிறீர்கள். வளர்ந்த பாரதத்துக்காக அடுத்த 20 ஆண்டுகளும் மிகவும் முக்கியமானவை. இதில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் நாங்கள் பல மைல் கற்களை கடந்து விடுகிறோம்.
அதாவது 2030 எரிசக்தி ஆண்டுக்கு 50 லட்சம் டன் பசுமை ஹைட்ரஜன் எண்ணெய் மற்றும் கியாஸ் வளங்களுக்கான புதிய சுற்றுகளை தொடங்குதல் போன்ற இலக்குகள் கடந்த 10 ஆண்டுகளில் நாங்கள் அடைந்த சாதனைகள் இதையும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையை இந்தியா வைத்துள்ளது. வளர்ச்சியில் கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா பத்தாவது இடத்தில் இருந்து ஐந்தாம் இடத்திற்கு முன்னேறி உள்ளது.சூரிய ஒளி மின்சக்தி 32 மடங்கு அதிகரித்து வருகிறது இருக்கிறது. இந்தியா இன்று உலகின் மூன்றாவது பெரிய சோலார் மின் உற்பத்தி நாடாக உள்ளது. அதன் புதை படிவம் மற்ற எரிபொருள் திறன் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. பாரிஸ் பருவநிலை மாற்ற மாநாட்டு கார்பன் உமிழ்வு இலக்கை முதலில் அடைந்த ஜி 20 நாடாக இந்தியா உள்ளது. இந்தியா தற்போது பெட்ரோலுடன் 19 சதவீதம் எத்தனால் கலப்பை செய்து வருகிறது. அடுத்த ஆண்டு அக்டோபருக்குள் 20 சதவீதம் என்ற இலக்கை எட்டி விடுவோம் இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.