பெண்கள் வீட்டில் இருந்து இனி பணி செய்யலாம்: புதிய திட்டத்தை அறிவித்த ஆந்திர முதல்வர்!
பெண்கள் வீட்டில் இருந்து கொண்டு பணிபுரிந்து அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்த புதிய திட்டத்தை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிமுகம் செய்துள்ளார். தனது சமூக வலைதளத்தில் அவர் கூறும் போது, பெண்களின் வாழ்க்கை மேம்படுத்தவும் வேலை வாய்ப்புகளை அதிகரிக்கவும், இந்தத் திட்டம் உதவியாக இருக்கும். ஐடி துறையில் வேலை செய்யும் பெண்களுக்கு வீட்டிலிருந்தே வேலை செய்வதற்கான புதிய ஐடி கொள்கையை செயல்படுத்த உள்ளோம்.
மேலும் இந்தத் திட்டத்தின் மூலம் பெண்கள் அவர்களின் சொந்த ஊர்களில் பணிபுரியலாம் ஒவ்வொரு மாநகரம் நகரம் மற்றும் மண்டலத்தில் கிராமப்புறங்களில் இருந்து வரும் அனைவரும் பயன்படும் வகையில் அவர்களுக்கு தகுந்தவாறு அலுவலகங்கள் அமைக்க ஐடி நிறுவனங்களுக்கு வலியுறுத்தி உள்ளோம்.
ஆந்திரா மாநிலத்தின் இந்த முயற்சி பெண்களின் பொருளாதார சுதந்திரத்திற்கு ஒரு முன்னுதாரணமாக அமையும். ஆந்திராவின் ஐடி மற்றும் ஐசிசி துறையில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் மையில் கல்லாக அமையும் என அவர் தனது கருத்தை பதிவிட்டுள்ளார்.