அதிரடியான புதிய வருமான வரி மசோதா தாக்கல்: சிறப்பம்சங்களில் என்ன தெரியுமா?

Update: 2025-02-14 15:43 GMT

புதிய வருமான வரி சட்ட மசோதாவில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் லோக்சபாவில் தாக்கல் செய்தார். தற்போது இந்தியாவில் நடைமுறையில் உள்ள வருமான வரி சட்டம் 1961 ஆம் ஆண்டு இயக்கப்பட்டது. 60 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிவிட்டதால் இதில் பல திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதனால் புதிய வருமான வரி மசோதா தாக்கல் செய்யப்படும் என பட்ஜெட்டில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருந்தார்.


அதன்படி பிப்ரவரி 13 லோக்சபாவில் புதிய வருமான வரி மசோதாவை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.சிக்கல் இன்றி வருமான வரியை தாக்கல் செய்ய புதிய சட்ட மசோதா வழிவகை செய்யும்.புதிய மசோதாவில் எளிமைப்படுத்தப்பட்ட வார்த்தைகள் இடம்பெறும் இந்த மசோதா ஆய்வுக்காக பார்லி நிலை குழுவிற்கு அனுப்பப்பட்டுள்ளது.

மொழி எளிமைப்படுத்தல் காரணமாக, சட்ட மசோதா சுருக்கமாகவும் தெளிவாகவும் புரிந்து கொள்ள முடியும். இது வழக்குகளை குறைக்கும். வரி செலுத்துவோருக்கு நம்பிக்கை அளிக்கும். படிப்பவர்கள் புரிந்து கொள்வதற்கு எளிதாக நீளமான சொற்களுக்கு பதில் சிறிய சொற்கள் இடம் பெறும்.புதிய வருமான வரி மசோதா 622 பக்கங்கள் இருக்கிறது. 1961 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட வருமான வரி சட்டம் 880 பக்கம் கொண்டதாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News