உலகமெங்கும் திருக்குறளின் புகழ் பரப்பி வரும் மோடி!

பிரதமர் மோடி உலகெங்கும் திருக்குறளை பரப்பி வருகிறார் என்று மத்திய மந்திரி எல். முருகன் கூறினார்.

Update: 2025-02-16 10:45 GMT

வாரணாசியில் நேற்று நடைபெற்ற மூன்றாவது காசி தமிழ்ச் சங்கமம் தொடக்க விழாவில் மத்திய இணை மந்திரி எல்.முருகன் பேசியதாவது:-

பிரதமரின் ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற தொலைநோக்கின் அடிப்படையில் கடந்த இரண்டு ஆண்டுகள் இந்த சங்கமும் இங்கே நடந்திருக்கிறது .காசியும் ராமேஸ்வரமும் மிக முக்கியமான தலங்கள். எப்படி நாம் காசிக்கு வருகிறோமோ அதே போல காசியில் இருந்து மக்கள் ராமேஸ்வரம் செல்கிறார்கள்.தமிழ்நாட்டின் பல பகுதிகள் ராமாயணத்தில் இடம் பெற்றுள்ளன. அதேபோல மகாபாரதத்திலும் இடம் பிடித்திருக்கிறது. சங்க இலக்கியங்களில் குறிஞ்சித் திணை காசியை பற்றி எடுத்துரைத்து இருக்கிறது.

திருநாவுக்கரசர் காசியைப் போற்றி இருக்கிறார். கலாச்சாரத்திலும் இது எதிரொலிக்கிறது. தென்காசியில் சிவகாசியில் இன்று தமிழ்நாட்டுக்கும் காசிக்கும் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தொடர்பு இருந்திருக்கிறது .உலகில் பிரதமர் மோடி எங்கெல்லாம் செல்கிறாரோ அங்கெல்லாம் திருக்குறளை பெருமைப்படுத்தி வருகிறார் .பாஜக தேர்தல் அறிக்கையில் உலகெங்கும் திருவள்ளுவருக்கு கலாச்சார மையங்கள் அமைக்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்தார். அதன்படி மூன்றாவது முறையாக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு கலாச்சார மையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. ஐநா சபையில் கூட யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று அவர் தமிழில் பேசினார். பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் பாரதியாருக்கு தனி இடம் ஒதுக்கப்பட்டு இருக்கிறது. எனவே பிரதமருக்கு தமிழ் மக்கள் சார்பில் நன்றியும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News