கடந்த காலங்களில் சிபாரிசுகளுடன் நடந்த பத்ம விருதுகளில் இன்று வெளிப்படை தன்மை!ஆளுநர் பெருமிதம்!

Update: 2025-02-16 16:12 GMT

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடப்பாண்டிற்கான பத்ம விருது பெற உள்ள தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு பிப்ரவரி 15 இல் பாராட்டு விழா நடைபெற்றது அதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஆளுநர் பத்ம விருதுகளை பெற உள்ள நல்லி குப்புசாமி மற்றும் ஷோபனா உள்ளிட்டவர்களுக்கு நினைவு பரிசுகளை வழங்கி பாராட்டினார்

மேலும் இந்த நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் விருது பெற்ற அனைவருமே அர்ப்பணிப்புடன் பணியாற்றி இந்த இடத்திற்கு முன்னேறி உள்ளனர் பத்ம விருதுகள் கடந்த காலங்களில் சில சிபாரிசுகளின் அடிப்படையிலேயே வழங்கப்பட்டு வந்தது ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக உரிய மற்றும் தகுதி உள்ள நபர்களுக்கு மட்டுமே விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது 

உள்துறையில் நான் பணியாற்றிய பொழுதே பத்ம விருதுகளுக்கு பல பரிந்துரைகள் வரும் ஆனால் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சி பொறுப்பில் அமர்ந்த பிறகு பத்ம விருதுகளில் வெளிப்படை தன்மை இருப்பதோடு சமூகத்தில் வெளியே தெரியாமல் சிறந்த சேவையை செய்பவர்களை மத்திய அரசு தேடி கண்டறிந்து அவர்களுக்கு பத்ம விருதுகளை வழங்கி கௌரவிக்கிறது என்று பேசினார் 

Tags:    

Similar News