கூட்ட நெரிசலால் தான் ரயில் விபத்துக்கு காரணம்: காவல் துறையினர் விளக்கம்!

Update: 2025-02-18 13:48 GMT

டெல்லி ரயில்நிலையத்தில் நிகழ்ந்த கூட்ட நெரிசலால் ஏற்பட்ட உயிரிழப்பு,இரு ரயில்களின் பெயர்கள் ஒரே மாதிரியாக இருந்ததே காரணம் என்ன டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர்.இப்போ உங்களுக்கு உத்தரபிரதேசத்தில் நடக்கும் கும்பமேளாவிற்காக டெல்லியில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன நேற்று இரவு கும்ப மேலாவிற்கு செல்வதற்கு டெல்லி ரயில் நிலையத்திலிருந்து ஏராளமானோர் குவிந்தனர். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 18 பேர் உயிரிழந்தனர் மேலும் சிலர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளனர்.


இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூபாய் 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று இந்திய ரயில்வே துறைக்கு உத்தரவிட்டுள்ளது ரயில் விபத்துக்கான காரணம் என்ன என்பது குறித்து டெல்லி போலீஸார் விளக்கம் அளித்துள்ளனர். இரு ரயில்களின் பெயர்களும் ஒரே மாதிரியாக இருந்ததுதான் காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.பிரயாக்ராஜ் எக்ஸ்பிரஸ் மற்றும் பிரயாக்ராஜ் ஸ்பெஷல் என இரு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.பிரயாக்கா ராஜ் எக்ஸ்பிரஸ் ரயில் ஏற்கனவே நடைமேடை 14 ல் நின்று கொண்டிருந்தது. அப்போது அங்கு வந்த பிரயாக்ராஜ் ஸ்பெஷல் ரயில் நட மேடை 16க்கு வருவதாக ஒலிபெருக்கியில் அறிவிக்கப்பட்டது.

இதனால் நடைமேடை 14 இருந்த பயணிகள் ஒட்டுமொத்தமாக நடைமுறை பதினாறுக்கு முண்டியடித்து சென்றுள்ளனர். இதன் காரணமாக கூட்ட நெரிசல் ஏற்பட்டு உயிர் பலிகள் நிகழ்ந்துயள்ளன என டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர்.அதேபோல் நடைமேடை 12,13 மற்றும் 15 ஆகிய வரவேண்டிய மகத் எக்ஸ்பிரஸ், ஸ்வதந்ரதா சேனானி, புவனேஸ்வர் ராஜதானி ரயில்களும் தாகம் தாமதமாகி உள்ளது. இதனால் கூட்ட நெரிசல் அதிகரிக்க காரணம் என தெரிவித்துள்ளன.

Tags:    

Similar News