தஞ்சாவூரில் 14 வயது சிறுமியை ஏமாற்றி பாலி யல் வன்கொடுமை செய்த சம்பவம் தொடர்பாகபோக்ஸோ சட்டத் தின் கீழ் 2 இளைஞர்களைக் காவல் துறையினர் ஞாயிற்றுக் கிழமை கைது செய்தனர். சென்னையைச் சேர்ந்த 14 வயது சிறுமியும், அங்கு கூலி வேலை பார்த்த தஞ்சாவூர் மாவட்டம், திருவோணம் அருகேயுள்ள சின்னக் கோட்டைக்காடைச் சேர்ந்த எஸ். ஜெகதீஸ்வரனும் காதலித்து வந்தனர். சென்னையிலிருந்து சின்னக் கோட்டைக்காடுக்குத் திரும் பிய ஜெகதீஸ்வரனை சிறுமி தொடர்பு கொண்டு, தான் அங்கு வரு வதாகக் கூறினார்.
இதன்படி, தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்துக்கு வந்த அச்சி றுமி ஜெகதீஸ்வரனை தொடர்பு கொள்ள முயன்றபோதும் முடிய வில்லையாம். அச்சிறுமி தனியாக நிற்பதை பார்த்த புதுக்கோட்டை சாலை நேதாஜி நகரைச் சேர்ந்த சி. புவனேஸ்வரன் விசாரித்து, தனது வீட்டுக்கு வருமாறு கூறி அழைத்துச் சென்றார். ஆனால், அச்சிறு மியை புவனேஸ்வரன் ஒரு அறையில் அடைத்துவைத்து 3 நாள்க ளுக்கு பாலியல் வன்கொடுமை செய்தார்.
பின்னர், அச்சிறுமியை சென்னைக்கு பேருந்தில் ஏற்றி அனுப்பு வதற்காக புவனேஸ்வரன் புதிய பேருந்து நிலையத்துக்கு அழைத் துச் சென்றார். அப்போது, அங்கிருந்த காவல் துறையினர் சந்தே கமடைந்து இருவரையும் பிடித்து விசாரணை மேற்கொண்ட போது, புவனேஸ்வரன் சிக்கினார். இதையடுத்து, விசாரணை மேற் கொண்டு ஜெகதீஸ்வரனையும் பிடித்தனர்