தேசிய கல்வி கொள்கை அமல்படுத்தினால் சிபிஎஸ்இ தரத்தை எட்டும் அரசு பள்ளிகள்:அரசு பள்ளி ஆசிரியர்கள் கோரிக்கை!
தமிழகத்தில் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதில் தமிழகத்தில் ஆளும் கட்சியாக உள்ள திமுக கடுமையாக எதிர்த்து வருகிறது இதற்கு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை புதிய கல்விக் கொள்கை பற்றி முழு விளக்கத்தையும் அரசு பள்ளிகளில் புதிய கல்வி கொள்கை கொண்டு வந்தால் அரசு பள்ளி மாணவ மாணவியர்களுக்கு கிடைக்கும் கல்வியின் தரத்தையும் எடுத்துரைத்து வருகிறார் இந்த நிலையில் அரசு பள்ளிகளுக்கு புதிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்பட்டால் அரசு பள்ளிகள் சிபிஎஸ்இ தரத்திற்கு மாறும் என்றும் தமிழக கல்விமுறை தரம் வாய்ந்ததாக மாற்ற தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவது நல்லது என அரசு பள்ளி ஆசிரியர்கள் கூறியுள்ளனர்.
இதுகுறித்து அரசு பள்ளி ஆசிரியர்கள் தேசிய கல்விக் கொள்கையை பாஜக ஆளுகின்ற மாநிலங்கள் மட்டும் இன்றி எதிர்க்கட்சிகளான காங்கிரஸ் கம்யூனிஸ்ட் ஆளும் மாநிலங்களில் கூட தேசிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்பட்டுள்ளது கர்நாடக மற்றும் கேரளா அரசுகள் கூட இந்த கல்விக் கொள்கையை ஏற்ற நிலையில் தமிழக அரசு மட்டும் இதனை அரசியலாகிறது
தனியார் பள்ளிகளில் ஐந்தாம் வகுப்பு வரை மூன்றாவது மொழி பாடமாகவும் சிபிஎஸ்இ பள்ளிகளில் எட்டாம் வகுப்பு வரை ஹிந்தி கட்டாயமாக்கப்பட்டுள்ளது அரசு பள்ளியில் மட்டும் தான் ஹிந்தி படிப்பதற்கான வாய்ப்பு இல்லை தமிழக பள்ளிக்கல்வித்தாரத்தை பொருத்தவரையில் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்திய மற்ற மாநிலங்களை விட பின்தங்கியே உள்ளது நீட் ஜேஇஇ போன்ற உயர்கல்வி நுழைவு தேர்வுகளை படிப்பதிலும் தமிழக மாணவர்கள் திணறி வருகின்றனர் எனவே இதில் அரசியல் செய்யாமல் ஏழை எளிய அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு தரம் வாய்ந்த கல்வியை வழங்க தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவது நல்லது என தெரிவித்துள்ளனர்