மணிப்பூர் மக்களுக்கு ஏழு நாட்கள் கெடு: ஆயுதங்களை ஒப்படைக்க கவர்னர் கோரி!

Update: 2025-02-22 15:04 GMT
மணிப்பூர் மக்களுக்கு ஏழு நாட்கள் கெடு: ஆயுதங்களை ஒப்படைக்க கவர்னர் கோரி!

சட்டவிரோதமாக வைத்துள்ள ஆயுதங்களை இளைஞர்கள் போலீஸ்சாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று மணிப்பூர் கவர்னர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.கூகி மற்றும் மெய்தி ஆகிய சமூகங்களிடையே 20 மாதங்களுக்கும் மேலாக மணிப்பூரில் மோதல் நீடித்து வருகிறது. இதனால் அங்கு பாதுகாப்பு படையினர் குவிக்கப் படுகின்றனர். பாஜக கட்சியின் முதல்வராக இருந்த பைரோன்சிங் தனது பதவியை ராஜினாமா செய்தார்.


ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப் பட்டுள்ளது. இந்நிலையில் மணிப்பூர் கவர்னர் அஜய்குமார் பல்லா வெளியிட்ட அறிக்கையில்,கடந்த 20 மாதங்களாக மணிப்பூர் மாநிலத்தில் நடக்கும் சம்பவங்களினால் அம்மாநிலத்தின் அமைதி, ஒற்றுமை மக்களின் அன்றாட பணிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. மக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு கொண்டு வரவும் சட்ட ஒழுங்கு பாதுகாக்கவும் அனைவரும் உதவி செய்ய வேண்டும். 


இளைஞர்கள் மற்றும் அனைத்து தரப்பு மக்களும் தாமாக முன்வந்து கொள்ளையடிக்கப்பட்ட சட்டவிரதமாக வைத்துள்ள ஆயுதங்களை போலீசாரிடமும் பாதுகாப்பு படையிடம் 7 நாட்களுக்குள் ஒப்படைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இதனால் மாநிலத்தில் அமைதி உறுதி செய்யப்படும். குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் ஆயுதங்களை ஒப்படைப்பவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது இல்லை என்றால் ஆயுதங்களை சட்ட விரோதமாக வைத்துள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த அறிக்கையில் கவர்னர் கூறியுள்ளார்.

Similar News