உலக நாடுகள் இடையே வல்லரசாக மாறி வரும் இந்தியா: பிரதமர் பெருமிதம்!

Update: 2025-02-22 15:11 GMT

இந்தியர்கள் அனைவரும் நாட்டின் வளர்ச்சிக்காக இரவு பகலாக உழைக்கின்றனர் இந்தியா உலக வல்லரசாகம் மாறி வருகிறது, பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். புதுடில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் ஆன்மீகம் தொடர்பான மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த மாநாட்டில் சிறப்பு விருந்தினராக பூடான் பிரதமர் ஷெரிங் டோப்கே கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கூறியது, வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்க இந்திய மக்கள் ஒவ்வொருவரும் இரவு பகலாக பாடுபடுகின்றனர் இதற்கு மக்களின் வளர்ச்சியும் அவசியம். இந்தியா உலக அளவில் ஒவ்வொரு துறையிலும் மிக வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. இதற்கு நல்ல தலைவர்கள் தேவை.


முன்னேற்றத்திற்காக பாடுபடும் மக்களுக்கு எந்த ஒரு நாட்டிற்கும் இயற்கை வளங்கள் மட்டுமல்ல மனித வளங்களும் தேவை. நம் நாடு தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் துறையின் வளர்ச்சியை வேகப்படுத்தி உள்ளது. இன்று ஒவ்வொரு இந்தியரும் 21ஆம் நூற்றாண்டின் வளர்ந்த இந்தியாவுக்காக இரவும் பகலும் உழைக்கிறார்கள்.


இந்தியா உலக வல்லரசாக மாறி வருகிறது 140 கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டில் ஒவ்வொரு துறையிலும் தலைமை வலுவாக இருப்பது அவசியம் எவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.எனது மூத்த சகோதரரான பிரதமர் மோடியை பற்றி நினைக்கும் போதெல்லாம் கடினமாக உழைக்க வேண்டும் என்றும் புது உத்வேகம் கிடைக்கும் என்றும் சிறப்பு விருந்தினரான பூடான் பிரதமர் ஷெரின் மோடியை பெருமையாக கூறியுள்ளார்.

Tags:    

Similar News