காரைக்குடியில் கல்லூரி விடுதியில் தங்கி இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவிக்கு அதே கல்லூரியில் வாட்ச்மேன் ஆக வேலை செய்யும் அழகப்பன் என்பவர் பாலியல் தொல்லை கொடுப்பதாக புகாரின் அடிப்படையில் கைது செய்யப் பட்டுள்ளார். தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் தினம் தினம் பெருகி வருகின்றன. பாலியல் சம்பவங்களை மற்றும் வன்கொடுமைகளை தடுக்க தமிழக அரசு தவறிவிட்டது என எதிர் கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
தமிழகத்தில் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்கள் குறையாமல் உள்ளன. இதற்கு என்ன காரணம் என்று அரசு தனிக்குழு அமைத்து விரைந்து செயல்பட வேண்டும்.சட்டங்கள் கடுமையாக இருந்தாலும் குற்றவாளிகள் எளிதில் தப்பித்து விடுகின்றன அவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும். அண்மையில் அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மீண்டும் மாணவிகளுக்கு இது போன்ற சம்பவங்கள் அரங்கேறி வருவது வேதனை அளிப்பதாக உள்ளது.
இந்நிலையில் காரைக்குடியில் அழகப்பா அரசு பாலிடெக்னிக் கல்லூரி விடுதியில் தங்கி இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாக காரைக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில் போலீசார் நடத்திய விசாரணையில் விடுதி வாட்ச்மேன் பாலியல் தொந்தரவு அளித்தார் என்பது தெரிய வந்தது இதனால் வாட்ச்மேன் அழகப்பனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.