
லோக்சபா தேர்தலோடு சேர்த்து நாடு முழுவதும் உள்ள சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்படுவது குறித்து எதிர்க்கட்சிகள் கூறுவது போல இது சட்ட விரோதமானதோ ஜனநாயகத்திற்கு எதிரானது அல்ல கூட்டாட்சி தனித்துவம் குறையப்போவதும் இல்லை என மத்திய சட்ட அமைச்சர் தெரிவித்துள்ளது. அரசு செலவினங்களை குறைக்கும் வகையில் லோக்சபாவுக்கும் அனைத்து மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதற்கு பல எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஒரே நாடு ஒரே தேர்தல் 129 வது அரசியலமைப்பு சட்டத்திருத்தம் மசோதா பார்லிமெண்டில் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் மத்திய சட்டத்துறை அமைச்சகத்திடமிருந்து ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறைக்கு உறுதியான ஆதரவு கிடைத்துள்ளது.இவ்வாறு இந்தியா முழுவதும் ஒரே தேர்தல் நடத்துவதால் கூட்டாட்சி தனித்துவம் சீர்குலைந்து போவதில்லை என அமைச்சகத்தின் வரைவு குழு கருத்து தெரிவித்துள்ளது. மத்திய சட்ட அமைச்சகத்தின் இந்த ஆதரவு முக்கியமானதாக கருதப்படுகிறது.

நாடு முழுவதும் ஒரே தேர்தல் நடத்துவது குறித்து சட்ட நிபுணர்களுடன் கலந்து ஆலோசிக்க பார்லிமென்ட் கூட்டு குழு முடிவு செய்துள்ளது. டெல்லியில் நடந்த பாஜக மூத்த தலைவர் எம்.பி. சவுத்ரி தலைமையிலான 39 உறுப்பினர்களைக் கொண்ட பார்லிமென்ட் கூட்டுக் குழு ஆலோசனைக் கூட்டத்தில், திட்டத்தின் உயர்மட்ட குழுவின் செயலர் நித்தின் சந்திரா, சட்டக் குழுவின் தலைவரான நீதிபதி ரித்து ராஜ் அவஸ்தி ஆகிய இருவரும் தங்களது கருத்துக்களை பதிவு செய்தனர்.