ஊடகத் துறைகள் டிஜிட்டல் முறைக்கு மாறுவதற்கு வேண்டிய உதவிகளை மத்திய அரசு செய்ய தயார்-அஸ்வினி வைஷ்ணவ் உறுதி!

மத்திய ரயில்வேதுறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஸ்டோரிஃபோர்ட்18-டிஎன்பிஏ மாநாட்டில் காணொலி வாயிலாக கலந்து கொண்டு உரையாற்றினார் அப்பொழுது புதிய யுக மாற்றத்திற்கு ஏற்ப பாரம்பரிய ஊடகங்கள் தங்களை தகவமைத்துக் கொள்ள வேண்டும் ஏனென்றால் இளைய தலைமுறையினர் பாரம்பரிய ஊடகங்களில் இருந்து டிஜிட்டல் ஊடகங்களுக்கு முற்றிலுமாக மாறிவிட்டனர்
இந்த மாற்றத்திற்காக தேவைப்படுகின்ற எந்த ஒரு ஆதரவையும் வழங்க நாங்கள் முழுமையாக தயாராக இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்
முன்னதாக இந்த நிகழ்ச்சியில் டிஜிட்டல் செய்தி வெளியீட்டாளர்கள் சங்கம் இந்தியா முழுவதும் உள்ள அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களில் இருந்து 20 ஊடக நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்துகிறது