பட்ஜெட்டுக்கு பிந்தைய கருத்தரங்கு: பிரதமர் மோடி பங்கேற்பு!

Update: 2025-02-28 16:52 GMT
பட்ஜெட்டுக்கு பிந்தைய கருத்தரங்கு: பிரதமர் மோடி பங்கேற்பு!

மார்ச் 1 அன்று "வேளாண்மை மற்றும் கிராமப்புற வளம்" குறித்த பட்ஜெட்டுக்கு பிந்தைய இணையவழி கருத்தரங்கில் பிரதமர் பங்கேற்கிறார். இந்த ஆண்டு பட்ஜெட்டின் தொலைநோக்குப் பார்வையை செயல் விளைவுகளாக மாற்றுவதற்கான கூட்டு முயற்சியை இணையவழி கருத்தரங்கம் ஊக்குவிக்கும் மார்ச் 1-ஆம் தேதி மதியம் 12:30 மணியளவில் "வேளாண்மை மற்றும் கிராமப்புற செழிப்பு" என்ற தலைப்பில் பட்ஜெட்டுக்கு பிந்தைய இணையவழி கருத்தரங்கில் பிரதமர் நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் பங்கேற்கிறார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்களிடையே அவர் உரையாற்றுகிறார்.


இந்த ஆண்டு பட்ஜெட் அறிவிப்புகளை திறம்பட செயல்படுத்துவதற்கான உத்தியை வகுப்பதில் கவனம் செலுத்தும் விவாதத்திற்கு முக்கிய பங்குதாரர்களை ஒன்றிணைப்பதை கருத்தரங்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது. வேளாண் வளர்ச்சி மற்றும் கிராமப்புற வளத்திற்கு வலுவான முக்கியத்துவம் அளிக்கும் வகையில், பட்ஜெட்டின் தொலைநோக்குப் பார்வையை செயல் விளைவுகளாக மாற்றுவதற்கான ஒத்துழைப்பை இந்த அமர்வு ஊக்குவிக்கும்.

தனியார் துறை வல்லுநர்கள், தொழில்துறை பிரதிநிதிகள் மற்றும் துறை வல்லுநர்களின் முயற்சிகளை சீரமைக்கவும், பயனுள்ள செயல்படுத்தலை இயக்கவும் வலைதள கருத்தரங்கம் உதவும்

Tags:    

Similar News