சென்னையில் ஜெகதீஷ் அவரது மகன் ரோஹித் இருவரும் பேக்கரி கடைகளுக்கு இனிப்பு வகைகளை தயாரித்து வழங்கி வந்துள்ளனர் இந்த நிலையில் ரோஹித் 17,000 ரூபாயான தனது சம்பள பணத்தை தந்தை ஜெகதீஷிடம் கொடுத்திருக்கிறார் பிறகு தன்னுடைய செலவுக்காக தந்தையிடம் பணத்தை கேட்ட பொழுது ஜெகதீஷ் வீட்டில் எந்த வேலையும் செய்வதில்லை பொறுப்பில்லாமல் வேறு இருக்கிறாய் என மகனை திட்டி செலவிற்கு பணம் கொடுக்க மறுத்திருக்கிறார்
இதனால் மனவருத்தம் அடைந்த ரோகித் கடந்த இரண்டாம் தேதி வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த ஜெகதீஷை இரும்பு ராடு ஒன்றை எடுத்து அவரது தலையில் ஓங்கி அடித்திருக்கிறார் அதுமட்டுமின்றி இரத்த வெள்ளத்தில் கீழே சரிந்து கிடந்த தனது தந்தை ஜெகதீஷ் துடிதுடித்து உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதை தன்னுடைய செல்போனில் வீடியோவாக எடுத்து தன்னுடைய உறவினர்களுக்கு அனுப்பி வைத்துள்ளார்
அந்த வீடியோவை பார்த்த உறவினர்கள் சம்பவ இடத்திற்கு வந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த ஜெகதீஷை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர் ஆனால் அங்கு அவர் உயிரிழந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர் இதனை அடுத்து ஏழு கிணறு காவல் நிலையத்தில் ரோகித் அனுப்பிய வீடியோ குறித்த தகவலையும் ரோகித் மீது உறவினர்கள் புகார் அளித்தனர்
இதனை அடுத்து ரோகித்தை தேடிய போலீசார் ரோகித் தன்னுடைய சொந்த மாநிலமான ராஜஸ்தானிற்கு செல்ல சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு சென்றிருப்பது தெரிய வந்து அங்கு அவரை கையும் களவுமாக பிடித்துள்ளனர் இந்த செய்தி அப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது