பத்தாம் வகுப்பு சிபிஎஸ்இ பொது தேர்வை இரண்டு முறை நடத்த மத்திய அரசு ஒப்புதல்!
பத்தாம் வகுப்பு சிபிஎஸ்இ பொது தேர்வை ஆண்டுக்கு இரண்டு முறை நடத்த மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை ஆண்டுதோறும் இருமுறை நடத்தும் வரைவு விதிமுறைகளுக்கு அந்த வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த வரைவு விதிமுறைகளின் படி சிபிஎஸ்இ பொதுத்தேர்வின் முதல் கட்டம் கடந்த 17ஆம் தேதி முதல் வருகிற ஆறாம் தேதி வரை நடைபெறும். தேர்வின் இரண்டாம் கட்டம் மே ஐந்து முதல் மே 20 வரை நடைபெறும்.
இது தொடர்பாக வருகிற ஒன்பதாம் தேதி வரை சம்பந்தப்பட்டவர்கள் கருத்து தெரிவிக்கலாம். அந்த கருத்துக்கள் பரிசீலிக்கப்பட்ட பின்னர் இது தொடர்பான இறுதிக் கொள்கை மேற்கொள்ளப்படும் என்று சிபிஎஸ்இ வட்டாரங்கள் தெரிவித்தன.இது குறித்து சிபிஎஸ்இ மூத்த அதிகாரி ஒருவர் கூறினார் சிபிஎஸ்இ பொதுத்தேர்வு இருமுறை நடத்தப்பட்டாலும் ஒரே தேர்வு மையம்தான் மாணவர்களுக்கு ஒதுக்கப்படும். தேர்வுக்கான விண்ணப்பத்தின் போது இரு தேர்வுகளுக்கும் தேர்வு கட்டணம் அதிகரிக்கப்பட்டு வசூலிக்கப்படும் என்றார்.