வனவிலங்குகளின் பாதுகாப்பை அதிகரித்து ஒன்றரை லட்சம் உயிரினங்களுக்கு புகலிடத்தை உருவாக்கிய மோடி அரசு!

குஜராத்தில் உருவாக்கப்பட்டுள்ள அடர்ந்த வனப்பகுதியை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். இந்த வனப்பகுதியில் ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட உயிரினங்கள் வாழ்கின்றன.

Update: 2025-03-05 09:43 GMT

குஜராத்தின் ஜாம்நகரில் ரிலையன்ஸ் குடும்பத்தின் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை செயல்படுகிறது. இதயொட்டி சுமார் 3,500 ஏக்கர் பரப்பில் ரிலையன்ஸ் அறக்கட்டளை சார்பில் வன்தாரா என்ற பெயரில் அடர்ந்த வனப்பகுதி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வனத்தில் 200 யானைகள் 300 சிறுத்தைகள் சுமார் 300-க்கும் மேற்பட்ட சிங்கம் ,புலிகள் ஆயிரம் முதலைகள், இரட்டை தலை பாம்பு உட்பட பல்வேறு வகைகளைச் சேர்ந்த பாம்புகள் மற்றும் பறவையினங்கள் உள்ளன. ஒட்டுமொத்தமாக சுமார் 2000 வகைகளைச் சேர்ந்த ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட உயிரினங்கள் அங்கு வாழ்கின்றன. யானைகளுக்காக மட்டும் 600 ஏக்கர் ஒதுக்கப்பட்டுள்ளது.

யானைகளுக்காக சிறப்பு மருத்துவமனை செயல்படுகிறது.இதர உயிரினங்களுக்காக ஒரு லட்சம் சதுர அடி பரப்பளவில் அதிநவீன மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. அங்கு எம் ஆர் ஐ ,எக்ஸ்ரே ,அவசர சிகிச்சை பிரிவு, அறுவை சிகிச்சை கூடம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளதுகால்நடை மருத்துவர்கள் உட்பட 21க்கும் மேற்பட்டோர் இரவு பகலாக பணியாற்றி வருகின்றனர். இந்த சூழலில் இந்த வன்தாரா வனப்பகுதியை பிரதமர் நரேந்திர மோடி கடந்த இரண்டாம் தேதி அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்தார்ரஇது விரைவில் பொதுமக்களின் பார்வைக்காக திறக்கப்படும் என கூறப்படுகிறது.

வன்தாரா வனப்பகுதியில் பிரதமர் நரேந்திர மோடி 7 மணி நேரம் முகாமிட்டிருந்தார். அப்போது சிங்கம்,புலி ,யானை காண்டாமிருகம், பறவைகள் உள்ளிட்ட பல்வேறு வன உயிரினங்களை அவர் பார்வையிட்டார்.சிங்கக்குட்டிகளுக்கு பால் ஊட்டினார். யானைகள் உள்ளிட்ட பல்வேறு விலங்குகளுக்கு அவர் உணவு அளித்தார். இது தொடர்பான வீடியோ புகைப்படங்களை பிரதமர் நரேந்திர மோடி சமூக வலைவத் தளத்தில் நேற்று வெளியிட்டார். அதோடு அவர் கூறியிருப்பதாவது :-

வன்தாரா வனத்தை உருவாக்கிய ஆனந்த் அம்பானியையும் அவரது குழுவினரையும் வாழ்த்துகிறேன். அமில வீச்சால் பாதிக்கப்பட்ட ஒரு யானையை வன்தாராவில் பார்த்தேன். அந்த யானைக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்படுகிறது.சில யானைகள் பார்வைத் திறனை இழந்துள்ளன. அவற்றை பாகன்கள் மிகுந்த அக்கறையுடன் கவனித்துக் கொள்கின்றனர். லாரி மோதியதில் படுகாயம் அடைந்த ஒரு யானைக்கும் உயர்தர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News