வளர்ந்த இந்தியா என்ற கனவை அதிகாரம் பெற்ற பெண்களால் மட்டுமே நனவாக்க முடியும்-குடியரசு தலைவர் திரௌபதி முர்மு!
மகளிர் தினத்தை முன்னிட்டு டெல்லியில் வளர்ச்சி அடைந்த இந்தியாவுக்கான மகளிர் சக்தி என்ற கருப்பொருளில் நடைபெற்ற தேசிய மாநாட்டை குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தொடங்கி வைத்தார் இதில் பேசிய குடியரசு தலைவர் பெண்களின் சாதனைகளை கௌரவிக்கவும் பெண்களின் உரிமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் பாலின சமத்துவத்தை மேம்படுத்தவும் நம்மை அர்ப்பணிக்கும் ஒரு சந்தர்ப்பமாக இந்நாள் உள்ளது
50 ஆவது ஆண்டின் சர்வதேச மகளிர் தின கொண்டாட்டத்தில் நாம் இருக்கிறோம் இந்த காலகட்டத்தில் உன் எப்போதும் இல்லாத முன்னேற்றத்தை மகளிர் சமூகம் அடைந்துள்ளது என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை
வளர்ந்த இந்தியா என்ற கனவை நாம் நிறைவேற்ற பெண்கள் முன்னேறுவதற்கு சிறந்த சூழல் அவர்களுக்கு அவசியம் தன்னம்பிக்கை சுயமரியாதை சுதந்திரம் அதிகாரம் பெற்ற பெண்களின் வலிமை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே வளர்ந்த இந்தியாவை உருவாக்க முடியும் என தெரிவித்துள்ளார்