பிரதமர் சமூக வலைதள பக்கங்களை நிர்வகித்த பிரபலங்கள்: யார், யார் தெரியுமா?

Update: 2025-03-09 17:39 GMT

ஆண்டுதோறும் மார்ச் 8ம் தேதி சர்வதேச மகளிர் தினமாக கொண்டாடப்படும், இந்நன்னாளில் பிரதமர் மோடியின் சமூக ஊடக பக்கங்களை ஒரு நாள் மட்டும் நிறுவகிக்கும் பொறுப்பை பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இது பெண்களை கௌரவிக்கும் வகையில் 2020 ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சாதனைப் பெண்கள் ஆறு பேர் பிரதமர் மோடியின் சமூக வலைதள பக்கங்களை கையாண்டனர். அவர்கள் இந்தியாவின் செஸ் கிராண்ட் மாஸ்டர் வைஷாலி தமிழகத்தைச் சேர்ந்தவர். மும்பை பாபா அணு ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானி எலினா மிஸ்ரா, இஸ்ரோ விஞ்ஞானி ஷில்பி சோனி,தனியார் நிறுவனம் செயல் அதிகாரி அனஜய்தா ஷா, அனிதா தேவி பீகாரைச் சேர்ந்தவர் மற்றும் வக்கீல் அஞ்சலி அகர்வால் ஆகியோர் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர்.


இவர்கள் அனைவரும் தங்களது துறையில் திறமையுடன் செயல்பட்டு தன்னம்பிக்கையுடன் முன்னணியில் இருப்பவர்கள். அவர்கள் வெளியிட்டுள்ள பதிவில் :வைஷாலி : பிரதமர் மோடியின் சமூக வலைதள பக்கத்து கையாளுவது திரில்லான அனுபவமாக இருக்கிறது நாட்டுக்காக பல்வேறு போட்டிகளில் விளையாடி இருப்பது பெருமை அளிக்கிறது.

எலினா மிஷ்ரா மற்றும் சிஷ்பி சோனி கூறும் போது, இந்த உலகில் எல்லை இல்லாத அறிவியல் தொழில்நுட்பம் வித்தியாசமான, உற்சாகமான ஒன்று மிகவும் மகிழ்ச்சி தரக்கூடியது. நாட்டில் அணுசக்தி விண்வெளி திட்டத்தில் நம்மை போன்ற பல்வேறு விஞ்ஞானிகள் இருக்கின்றன. அஜைய்தா ஷா பதிவில் கூறும் போது, பொருளாதார ரீதியாக அதிகாரம் பெற்ற பெண் தன்னம்பிக்கையுடன் முடிவெடுப்பார். சுதந்திரமான சிந்தனையாளராக இருக்கும் பெண் தனது எதிர்காலத்தை தானே வடிவமைத்துக் கொள்ளும் சிற்பி. நவீன இந்தியாவை உருவாக்குபவள் என்பதை பெருமிதத்துடன் கூறுகிறேன் என்று அவர்கள் அனைவரும் பதிவிட்டுள்ளனர்.

Tags:    

Similar News