தமிழகத்தில் தலை விரித்தாடும் போதைப் பொருள் பழக்கம்: கஞ்சா விற்ற பெண் கைது!
ஸ்ரீவில்லிபுத்தூரில் கஞ்சா விற்ற பெண்ணை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர். ஸ்ரீ வில்லிபுத்தூர் நகரில் தடை செய்யப்பட்ட போதைப் பொருள் விற்பனை தொடர்பாக போலீஸார் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். காவல் உதவி ஆய்வாளர் ராஜா தலைமையிலான போலீஸார் மங்காபுரம் தனியார் பள்ளிப் பகுதியில் வியாழக்கிழமை ரோந்து சென்றனர்.
அப்போது, அங்கு சந்தேகத்துக்கு இடமளிக் கும் வகையில் நின்றிருந்த பெண்ணை பிடித்து விசாரித்தனர். விசார ணையில், ஸ்ரீவில்லிபுத்தூர் அய்யம்பட்டி தெருவைச் சேர்ந்த முருகன் மனைவி சத்யா என்பதும், இவர் விற்பனைக்காக கஞ்சா வைத்தி ருந்ததும் தெரியவந்தது.
இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து, அவரைக் கைது செய்தனர். மேலும், அவரிடமிருந்து கஞ்சா, கஞ்சா விற்ற பணம் ரூ.6,850-ஐ பறிமுதல் செய்தனர்.