நானும் தமிழகத்தின் மகன் தான்: மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேச்சு!

தமிழக அரசுக்கு கல்வி நிதி ஒதுக்குவது தொடர்பாக நேற்று முன்தினம் லோக்சபாவில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கும், திமுக எம்பிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ராஜேஷ் சபாவின் நேற்று தர்மேந்திர பிரதான் பேசியது: நான் ஒரு ஒடிசாக்காரன். அங்குள்ள கடவுள் ஜெகநாதனின் பக்தன். ஒடிசாவில் பகவான் பூரி ஜெகநாதரே எல்லாவற்றுக்கும் மேலானவர். அவர் ஒரு வாழும் கடவுள், அவர் திருமணம் செய்திருப்பது காஞ்சிபுரத்து ராணியை எனவே என் தாயார் தமிழகத்தில் இருந்து வந்தவர்.அந்த வழியில் நானும் தமிழகத்தின் மகன். எங்களது கலாச்சாரத்தின் படி அம்மா, சகோதரி அனைவரும் மிகவும் உயர்ந்தவர்கள். என் வார்த்தை யாரையாவது புண்படுத்தி இருந்தால் மீண்டும் மன்னிப்பு கேட்கிறேன், ஒருமுறை அல்ல 100 முறை கூட மன்னிப்பு கேட்கிறேன்.

பி.எம்.ஸ்ரீ திட்ட விவகாரத்தில் 13 முறை தமிழகத்தின் முதல்வர் ஸ்டாலின்,கல்வி அமைச்சர் மகேஷ் மற்றும் தலைமைச் செயலாளராக இருந்த சிவ்தாஸ் மீனா ஆகியோருடன் நானும் என் அமைச்சகமும் பலமுறை தகவல் தொடர்பு கொண்டுள்ளோம். அதில் பி.எம்.ஸ்ரீ பள்ளிகளை தமிழகத்தில் துவங்குவதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட ஆர்வமாக உள்ளதாக விருப்பம் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக குழு அமைத்து அதன் அடிப்படையில் அடுத்த கல்வி ஆண்டு துவங்குவதற்கு முன் கையெழுத்திட தயாராக உள்ளோம் என குறிப்பிட்டு இருந்தனர் இன்று அதை மறுக்கின்றனர். வளர்ந்த இந்தியாவை உருவாக்குவது எங்கள் இலக்கு. தமிழகம் இந்தியாவின் அங்கம். தமிழகத்தை முன்னேற்றுவது எங்களுக்கு பொறுப்பு, ஆனால் தமிழக மக்களை இனியும் உங்களால் ஏமாற்ற முடியாது. உங்கள் அரசியலுக்காக தமிழக மாணவர்களின் வாய்ப்பை கெடுக்காதீர்கள் இவ்வாறு பேசினார்.