தமிழகத்தில் அதிகரித்து வரும் போதைப் பொருள் பயன்பாடு: நடவடிக்கை எடுக்குமா அரசு?

மாதவரத்தில் மெத்தம்பெட்டமைன் போதைப் பொருள் வைத் திருந்த 7 பேரை போலீசார் கைது செய்தனர்.மாதவரம் பகுதியில் போதைப் பொருள் நடமாட்டம் இருப்பதாக சென்னை போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு நேற்று முன்தினம் ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, மாதவரம் பேருந்து நிலையம் டிரக்டெர்மினல் அருகே போலீஸார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, அங்கு வந்த 7 பேரிடம், சந்தேகத்தின் அடிப் படையில் போலீஸார் விசாரணை நடத்தினர். இதில், மெத்தம்பெட் டமைன் போதைப் பொருளை கைமாற்றுவதற்காக அவர்கள் வந்தது தெரியவந்தது. இதையடுத்து, பள்ளிக்கரணை ராகுல், முத்துராஜன், சதீஷ்குமார், தனி யார் கார் நிறுவனத்தில் வேலை செய்யும் ஆவடி அஜய், கால் சென்டரில் பணியாற்றும் பாடி நிஸ்டல், மண்ணடி சமீம் பிர் தவுஸ், பல்லாவரம் புருஷோத்தமன் ஆகிய 7 பேரையும் போலீஸார் கைது செய்தனர்.அவர்களிடம் இருந்து 7 கிராம் மெத்தம் பெட்டமைன், 80 கிராம் கஞ்சா பறி முதல் செய்யப்பட்டன.