அனைத்து மதத்தையும் சமமாக மதிக்க வேண்டும்: ஐ.நா. சபையில் இந்தியா உறுதி!

Update: 2025-03-16 17:16 GMT
அனைத்து மதத்தையும் சமமாக மதிக்க வேண்டும்: ஐ.நா. சபையில் இந்தியா உறுதி!

அனைத்து மதங்களையும் சமமாக மதிக்க வேண்டும் என்று ஐ.நா. சபையில் இந்தியா உறுதிபட தெரி வித்துள்ளது. கடந்த 2019-ம் ஆண்டுமார்ச் 15-ம் தேதி நியூசிலாந்தின் கிறைஸ்ட்சர்ச் நகரில் உள்ள மசூதியில் பிரன் டன் டாரன்ட் என்பவர் துப்பாக்கி யால் சரமாரியாக சுட்டார். இதில் 51 பேர் உயிரிழந்தனர். 89 பேர் படு காயம் அடைந்தனர். இந்த துயர சம்பவத்தை நினைவுகூரும் வகை யில் ஐ.நா. சபை சார்பில் ஆண்டு தோறும் மார்ச் 15-ம் தேதி 'இஸ் லாமிய வெறுப்பு எதிர்ப்பு தினம்' அனுசரிக்கப்படுகிறது.


இந்த தினத்தையொட்டி ஐ.நா. சபையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் ஐ.நா.வுக்கான இந் திய தூதர் ஹரிஷ் பேசினார். அவர் கூறும்போது, இந்தியா பன்முகத்தன்மை யின் பிறப்பிடமாக விளங்குகிறது. இந்திய தூதர் ஹரிஷ்இந்து மதம், புத்த மதம், சமண மதம், சீக்கிய மதம் ஆகியவை எங்கள் நாட்டில் தோன்றின. இந் தியாவில் சுமார் 20 கோடிக்கும் அதிகமான முஸ்லிம்கள் வசிக் கின்றனர். உலகில் அதிக முஸ் லிம்கள் வசிக்கும் நாடுகளில் ஒன் றாக இந்தியா திகழ்கிறது.

தற்போது மத பாகுபாடு மிகப் பெரிய பிரச்சினையாக உரு வெடுத்திருக்கிறது. இதன்காரணமாக உலகம் முழுவதும் ஏராள மானோர் பாதிக்கப்பட்டு வகுகின் றனர். முஸ்லிம் மதம் மட்டுமல்ல. எந்தவொரு மதத்தின் மீதும் பாகுபாடு காட்டக்கூடாது. இந்தியாவில் ஹோலி பண்டிகையும், ரம்ஜானும் ஒரே நேரத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது. இரு பண்டிகைகளை யும் நாங்கள் போற்றி கொண்டாடு கிறோம். அனைத்து மதங்களை யும் சமமாக மதித்து நடக்க வேண் டும். இதை அனைத்து உலக நாடு களும் கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும்.

Tags:    

Similar News