நண்பரின் தாயை இழிவாக பேசியதால் உருட்டு கட்டையால் அடித்து இளைஞர், திருப்போரூரில் கொலை செய்யப்பட்டுள்ளார்.திருப்போரூரை அடுத்துள்ள மேலையூர் கிராமத்தில் சென்னை அடையாறு. காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த பூபதி என்பவரின் சகோதரருக்கு சொந்தமான மனை உள்ளது. இந்த மனை இருக்கும் பகுதியை பூபதியும், அவரது நண்பர்களும் அவ்வப்போது வந்து பார்த்து விட்டு சுத்தம் செய்து விட்டு செல்வர்.
அதன்படி கடந்த 13-ம் தேதி பூபதி. பாஸ்கர், விஷ்ணு ஆகியோர் சுத்தம் செய்து மனையை சுற்றிலும் கற்கள் சாய்ந்து கிடந்ததை சரி செய்து நட்டுள்ளனர். பின்னர் அவற்றுக்கு வண்ணம் பூசி விட்டனர். அப்போது மாலை 6 மணிக்கு மேல் ஆகி விட்டதால் அந்த பகுதியில் இருந்த ஊராட்சி மன்றத்துக்கு சொந்தமான கலையரங்கத்தில் அமர்ந்து மது அருந்தி உள்ளனர்.
இரவு 9 மணி அளவில் மேலையூர் கிராமத்தைச் சேர்ந்த சரண்குமார் என்பவர் தனது மோட்டார் சைக்கிளில் அவ்வழியே சென்றுள்ளார். அவரை கூப்பிட்டு நிறுத்திய பாஸ்கர் அவரிடம் பேசியுள்ளார். பிறகு தன் தாயே அவமரியாதையாக பேசிய காரணத்தினால் அவரை அடுத்து கொலை செய்து இருக்கிறார். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்த விசாரணை நடத்தி வருகிறார்கள்.