ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மத்திய அரசின் சாதனை!

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நாடு முழுவதும் 100 நகரங்களில் இதுவரை 7400 திட்டப்பணிகள் நிறைவடைந்துள்ளதாக மத்திய மந்திரி மனோகர்லால் கட்டார் கூறியுள்ளார் .;

Update: 2025-03-18 09:45 GMT
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மத்திய அரசின் சாதனை!

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நாடு முழுவதும் 100 நகரங்களை மத்திய அரசு கடந்த 2015 ஆம் ஆண்டு தேர்வு செய்து அவற்றில் ஏராளமான பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த திட்டம் தொடர்பாக மாநிலங்களவையில் காங்கிரஸ் எம்பி ராஜீவ் சுக்லா கேள்வி எழுப்பினார்.அதாவது 2025 - 26 ஆம் நிதி ஆண்டில் இந்த திட்டத்திற்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக் காததால் அந்தத் திட்டம் முடிவடைந்ததா என கேள்வி எழுப்பினார். அதற்கு மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை மந்திரி மனோகர்லால் கட்டர் பதில் அளித்தார்.

ஸ்மார்ட் சிட்டி திட்டம் ஒரு கால வரையறை நிர்ணயத்துடன் கூடிய திட்டம் ஆகும். அத்துடன் 100 நகரங்களுக்கு மட்டுமே வரையறுக்கப்பட்ட திட்டமும் ஆகும். இந்த திட்டத்தில் மத்திய அரசு ரூபாய் 48,000 கோடி பங்களித்துள்ளது. அதே தொகையை மாநிலங்களும் வழங்க வேண்டும். இந்த திட்டத்தின் கீழ் மக்களின் சிறந்த வாழ்க்கை தரத்துக்காக ஸ்மார்ட் சாலைகள் மற்றும் டிஜிட்டல் மாயமாக்கல் போன்ற பலதிட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. தேர்ந்தெடுக்கப்பட்ட நூறு நகரங்களில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் இதுவரை 7400 க்கும் அதிகமான திட்ட பணிகள் நிறைவடைந்து விட்டன .தற்போது நடந்து வரும் பணிகளும் முடிக்கப்படும். இந்த திட்டம் வருகிற 31-ஆம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது.அதுவரை ஏதேனும் கோரிக்கை இருந்தால் அவையும் நிறைவேற்றப்படும்.

மேற்படி நகரங்களில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வளர்ச்சி பணிகள் நடைபெறாது.வேறு சில திட்டங்கள் மூலம் பணிகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு மனோகர்லால் கட்டார் கூறினார். ஸ்மார்ட் சிட்டி திட்டம் தொடர்பாக வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத்துறை இணை மந்திரி தோகன் ஷாகுவும் நேற்று மாநிலங்களவையில் பதில் அளித்தார். எழுத்து மூலம் அவர் அளித்த பதிலில் கூறியிருப்பதாவது :-கடந்த நான்காம் தேதி நிலவரப்படி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ்47,538 கோடி மதிப்பிலான மத்திய நிதி உதவியை  நகரங்கள் பெற முடியும். அதில் 45,772 கோடி பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் இதுவரை 93 சதவீத பணிகள் நிறைவடைந்து உள்ளன. தற்போது நடந்து வரும் பணிகளும் முடிவடைவதற்காக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கோரிக்கையை ஏற்று ஸ்மார்ட் சிட்டி திட்டம் வருகிற 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது .இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News