இளைஞர்களின் தொழில் திறனை மேம்படுத்த புதிய அலைபேசி செயலி- தேசநலனுக்கானத் திட்டங்களை தேடி தேடி அறிமுகம் செய்யும் மோடி !

இளைஞர்களிடையே தொழில் திறனை மேம்படுத்தும் வகையில் மத்திய அரசு சார்பில் அறிமுகப்படுத்தப்பட்ட பிரதமர் தொழில் பயிற்சி திட்டத்திற்கு கைபேசி செயலியை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.;

Update: 2025-03-18 10:00 GMT
இளைஞர்களின் தொழில் திறனை மேம்படுத்த புதிய அலைபேசி செயலி- தேசநலனுக்கானத் திட்டங்களை தேடி தேடி அறிமுகம் செய்யும் மோடி !

2024-25 ஆம் ஆண்டு கால கட்டத்தில் இளைஞர்களுக்கு 1.27 லட்சம் தொழில் பயிற்சி வாய்ப்புகளை அளிப்பதை இலக்காகக் கொண்டு முன்னோடி திட்டமாக கடந்த ஆண்டு அக்டோபர் மூன்றாம் தேதி இந்த பயிற்சி திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்தது. இந்த திட்டத்துக்கான கைபேசி செயலியை டில்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார். தொழில் நிறுவனங்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்கின்ற வகையில் திறன்மிக்க மனிதவளத்தை உருவாக்கும் நோக்கில்இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது .

நிறுவனங்கள் தொழில் பயிற்சிக்கு நபர்களை தேர்வு செய்வதையும் அந்த பயிற்சிக்கு இளைஞர்கள் விண்ணப்பிப்பதையும் மேலும் எளிதாக்கும் வகையில் இதற்கான கைபேசி செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பழமொழிகளில் சேவை அளிக்கும் வகையில் இந்த செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது .இந்த திட்டத்தில் அதிக நிறுவனங்கள் இளைஞர்களை பயிற்சிக்கு தேர்வு செய்ய வேண்டும். ஆனால் அது கட்டாயம் அல்ல. அதுபோல இந்த திட்டத்தில் சேரும் நிறுவனங்களுக்கு எந்தவித குறிக்கீடுகளும் இருக்காது.

இது தேச நலனுக்கான திட்டம். இந்த திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக 1.27 லட்சம் தொழில் பயிற்சி வாய்ப்புகளை அளிப்பதை இலக்காக கொண்டு அறிமுகப்படுத்தப்பட்டது .இரண்டாம் கட்டமாக ஜனவரி முதல் 327 நிறுவனங்கள் சார்பில் 1.18 லட்சம் பயிற்சி வாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த இரண்டாம் கட்ட பயிற்சி திட்டத்திற்கு விண்ணப்பிக்க மார்ச் 31 கடைசி தேதி ஆகும் என்றார். இந்த திட்டத்தின் கீழ் பயிற்சியில் சேரும் இளைஞர்களுக்கு 12 மாதங்களுக்கு மாதம் 5000 உதவி தொகையும் ஒருமுறை மானியமாக 6000 வழங்கப்படும்.

Tags:    

Similar News