விண்வெளித்துறையில் அடுத்தடுத்த கட்டத்தை நோக்கி அசுர வேகத்தில் வளர்ச்சியை உருவாக்கி வரும் மத்திய அரசு!

ஜப்பான் நாட்டு விண்வெளி துறையுடன் இணைந்து செயல்படுத்த இருக்கும் இந்தியாவின் லட்சிய பயணமான சந்திரன் 5 திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது என்று இஸ்ரோ தலைவர் வி. நாராயணன் கூறினார்.;

Update: 2025-03-19 07:00 GMT
விண்வெளித்துறையில் அடுத்தடுத்த கட்டத்தை நோக்கி அசுர வேகத்தில் வளர்ச்சியை உருவாக்கி வரும் மத்திய அரசு!

இந்தியாவின் லட்சிய பயணமான சந்திரயான் 5 பணிக்கு மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் அளித்துள்ளது. ஜப்பானுடன் இணைந்து இந்தப் பணியை செய்ய இருக்கிறோம். இந்தப் பயணமானது குறிப்பிடத்தக்களவு பெரிய ரோவரை சுமந்து செல்கிறது. சந்திரயான்-5 மூன்று திட்டத்தில் பயன்படுத்தப்பட்ட 25 கிலோ எடையுள்ள பிரக்யான் ரோவரை விட அதிகமாக இந்த திட்டத்தில் 250 கிலோ எடையிலான ரோவர் பயன்படுத்தப்படுகிறது. சந்திராயன் தொடர் திட்டங்கள் இந்தியாவின் நிலவாய்வு முயற்சிகளுக்கு மிக முக்கியமானது.

முதல் திட்டமான சந்திரயான் 1 கடந்த ஆண்டு 2008 ஆம் ஆண்டு செயல்படுத்தப்பட்டது.இந்த திட்டத்தின் மூலம் சந்திரனின் வேதியியல், கனிமவியல் மற்றும் புகைப்பட- புவியியல் வரைபடம் பெறப்பட்டதுடன் பல்வேறு முக்கிய ஆராய்ச்சிகளும் செய்யப்படுத்தப்பட்டு பலதரவுகள் பெறப்பட்டன. சந்திரயான் 2 பணி கடந்த 2019 ஆம் ஆண்டு விண்ணில் ஏவப்பட்டது. 98 சதவீதம் வெற்றி  அடைந்தது. இருந்தாலும் லேண்டர் அதன் இறுதிக் கட்டத்தில் தோல்வியடைந்தது. இருப்பினும் உள் உயர் தெளிவுத்திறன் கொண்ட கேமரா நூற்றுக்கணக்கான படங்களைத் தொடர்ந்து அனுப்பி வருகிறது.

சந்திரயான்-3  பணியில் கடந்த 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23ஆம் தேதி விக்ரம் லேண்டர். நிலவின் தென்துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது.இது உலகிற்கு இந்தியாவின் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கும் திறன்களை நிரூபித்தது. தற்போது சந்திரயான் 4 திட்டத்திற்கு இஸ்ரோ தயாராகி வருகிறது. நிலவு மாதிரிகளை சேகரித்து பூமிக்கு கொண்டுவரும் இலக்குடன் இந்த திட்டம் அமைந்துள்ளது. சந்திரயான் 5 திட்டம் வருகிறது 2027 ஆம் ஆண்டு விண்ணில் ஏவப்பட திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தியாவின் மனித விண்வெளிப் பயணத்திட்டமான ககன்யான் மற்றும் நாட்டின் சொந்த விண்கலநிலையம் ஆன பாரதிய விண்வெளி நிலையத்தை நிறுவும் திட்டங்கள் உள்ளிட்டவை இஸ்ரோவின் எதிர்கால திட்டங்கள் ஆகும். சந்திரயான்-5 திட்டத்திற்கு தற்போது மத்திய அரசின் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் ஜப்பானுடன் இணைந்து இந்தியா தனது நிலவு ஆய்வை வலுப்படுத்த உள்ளது. இது உலகளாவிய விண்வெளி ஆராய்ச்சியில் தனது பங்கை விரிவு படுத்துவதற்கான மற்றொரு படியாகும்.இவ்வாறு இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் கூறினார். 

Tags:    

Similar News