பூமியில் கால் பதிக்கும் விண்வெளி வீர மங்கைக்கு வாழ்த்து தெரிவித்து இந்தியாவிற்கு அழைப்பு விடுத்த பிரதமர் மோடி!

விண்வெளியில் இருந்து ஒன்பது மாதங்களுக்கு பிறகு பூமியில் கால் பதிக்கும் சுனிதா வில்லியம்ஸ்க்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.மேலும் அவரை இந்தியாவுக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.;

Update: 2025-03-19 07:30 GMT
பூமியில் கால் பதிக்கும் விண்வெளி வீர மங்கைக்கு வாழ்த்து தெரிவித்து இந்தியாவிற்கு அழைப்பு விடுத்த பிரதமர் மோடி!

இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ் விண்வெளியில் அமைந்துள்ள சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் இருந்து 9 மாதங்களுக்கு பிறகு ஸ்பேஸ் நிறுவனத்தின் குரு டிராகன் விண்கலம் மூலம் பூமிக்கு புறப்பட்டார்.அனேகமாக அவர் இந்திய நேரப்படி இன்று அமெரிக்காவின் ஃப்ளோரிடா கடல் பகுதியை வந்தடைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 9 மாதங்களுக்குப் பிறகு பூமியில் கால் பதிக்க உள்ள சுனிதா வில்லியம்ஸ்க்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் எழுதி முன்னாள் நாசா விண்வெளி வீரர் மைக் மாசி மினோ மூலம்  அனுப்பப்பட்ட இந்த கடிதத்தை மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மந்திரி ஜிதேந்திர சிங் தனது எக்ஸ்ஸ்தலத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வாழ்த்து செய்தியில் நீங்கள் ஆயிரக்கணக்கான மைல்கள் தொலைவில் இருந்தாலும் எங்கள் இதயங்களுக்கு நெருக்கமாக இருக்கிறீர்கள்.இந்திய மக்கள் உங்கள் நல்ல ஆரோக்கியத்திற்காகவும் உங்கள் பணியில் வெற்றி பெறவும் பிரார்த்தனை செய்கிறார்கள் .நீங்கள் திரும்பிய பிறகு இந்தியாவில் உங்களை பார்க்க நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம்.இந்தியா தனது மிகவும் புகழ் பெற்ற மகள்களில் ஒருவரை வரவேற்பதில் மகிழ்ச்சி அடையும்.

எனது ஒவ்வொரு அமெரிக்க பயணத்தின் போதும் உங்களைப் பற்றி விசாரித்து இருக்கிறேன். உங்களது சாதனைகளில் 140 கோடி இந்தியர்களும் பெருமை கொள்கிறார்கள. சமீபத்திய முன்னேற்றங்கள் உங்கள் மன உறுதியையும் விடாமுயற்சியையும் மீண்டும் வெளிப்படுத்தி உள்ளன. உங்களுக்காக காத்திருக்கும் உங்களின் தாயார் போனி பாண்ட்யாவுடன் உங்கள் தந்தை தீபக் பாயியின் ஆசிர்வாதமும் இருக்கும் என்று நம்புகிறேன். இவ்வாறு வாழ்த்து கடிதத்தில் பிரதமர் மோடி கூறியுள்ளார். இதேபோல் சுனிதா வில்லியம்ஸ்-ன் கணவர் மைக்கேல் வில்லியம்ஸ்க்கு பிரதமர் தனது வாழ்த்துக்களை அனுப்பி உள்ளார்.

Tags:    

Similar News