மீனவர்கள் கைதிற்கு வைகோ முன்வைத்த குற்றச்சாட்டு:நிர்மலா சீதாராமன் அளித்த பதில்!

மாநிலங்களவையில் பேசிய வைகோ கடந்த 40 ஆண்டுகளில் 843 மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார்கள் ஜனவரி 25ஆம் தேதி முதல் 45 நாட்களில் பல தாக்குதல்களை இலங்கை கடற்படை நடத்தியுள்ளது மேலும் பல மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுகின்றனர் இலட்சக்கணக்கில் அபராதமும் விதிக்கப்படுகின்றனர் இப்படி இலங்கை கடற்படையின் மனிதநேயமற்ற நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்
இதனால் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு செல்லக்கூடாது இந்திய கடற்படை ஒரு முறையாவது ஒரு துப்பாக்கி சூட்டையாவது நடத்தி உள்ளதா இதனால் தான் இந்திய கடற்படையும் இலங்கை கடற்படையும் இணைந்து செயல்படுகிறது என்றார்
வைகோவின் இந்த உரைக்கு பதில் அளித்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வைகோவின் உணர்ச்சிகரமான பேச்சில் உள்ள கவலையை நாங்கள் புரிந்து கொள்கிறோம் ஆனால் அவர் பேசியதில் ஒரு வார்த்தை மட்டும் அவர் கோபத்தில் பேசியிருக்கிறார் என கூறுகிறேன் அந்த வார்த்தை குறித்து மறு பரிசீலனை செய்ய வேண்டும் ஏனென்றால் அந்த கருத்து உண்மையானதல்ல
நமது மீனவர்களை துன்புறுத்துவதற்காக நமது கடற்படை இலங்கை கடற்படையுடன் இணைந்து செயல்படுமா இந்திய அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது இலங்கை அரசுடன் பிரதமர் நரேந்திர மோடி 2014ல் பதவி ஏற்ற உடன பேசினார் இலங்கை சிறையில் உள்ள இந்திய மீனவர்கள் உயிருடன் திருப்பி அனுப்ப வேண்டும் என்று கூறினார் நமது மீனவர்களுக்கு எப்போது எல்லாம் பிரச்சனை ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் நமது வெளியுறவுத்துறை அமைச்சகமும் பிரதமரும் உதவி இருக்கிறார்கள். அதனால் அந்த ஒரு வார்த்தையை மட்டும் நீக்க வேண்டும் என அவை தலைவரை கோருகிறேன் என்று குறிப்பிட்டார்
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் இந்த கருத்தை அடுத்து வைகோவின் அந்த குறிப்பிட்ட வார்த்தை மட்டும் நீக்கப்பட்டுள்ளது